எஸ்.பி.பியால் எம்.ஜி.ஆருக்கு இப்படி ஒரு சிக்கல் வந்ததா… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த உலகை விட்டு நீங்கினாலும் நம் நினைவுகளை விட்டு என்றும் நீங்காதவர். தனது பாடல்களின் மூலம் ரசிகர்களின் வாழ்வில் ஒன்றிப்போன மகா கலைஞராக திகழ்ந்தவர் எஸ்.பி.பி. இவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
அவ்வாறு அவர் பாடியதால் எம்.ஜி.ஆருக்கும் டி.எம்.எஸ்ஸுக்கும் இடையே ஒரு சிறு மோதல் இருந்ததாம். அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
எஸ்.பி.பி-ஐ பாடவைத்த எம்.ஜி.ஆர்..
1969 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் “அடிமைப் பெண்”. இத்திரைப்படத்தை கே.ஷங்கர் இயக்கியிருந்தார். கே.வி.மகாதேவன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த 6 பாடல்களில் “ஆயிரம் நிலவே வா” என்ற காலத்துக்கும் அழியாத பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இதுதான் எஸ்.பி.பி, எம்.ஜி.ஆருக்கு பாடிய முதல் பாடல். இந்த நிலையில் இப்பாடலை எஸ்.பி.பியை கொண்டு பாட வைத்ததால் டி.எம்.எஸ்ஸுக்கு ஒரு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதாம்.
சம்பளத்தை கூட்டிய டி.எம்.எஸ்…
எப்போதும் எம்.ஜி.ஆர் படங்களில் பெரும்பான்மையான ஹிட் பாடல்களை டி.எம்.எஸ்தான் பாடுவார். ஆனால் “ஆயிரம் நிலவே வா” என்ற மிக ரம்மியமான பாடல் எஸ்.பி.பிக்கு அமைந்துவிட்டது. இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அடுத்த படத்திற்கு டி.எம்.எஸ் தனது சம்பளத்தை ஒரு பாடலுக்கு 100 ரூபாய் என உயர்த்திவிட்டாராம். “1000 ரூபாய் கொடுத்தால்தான் உங்கள் படத்திற்கு பாடுவேன்” என எம்.ஜி.ஆரிடம் உறுதியாக கூறினாராம். எனினும் இவ்வளவு மகத்தான பாடகரை விட முடியாது என்று எண்ணிய எம்.ஜி.ஆர், டி.எம்.எஸ் கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை பாடவைத்தாராம்.
இதையும் படிங்க: பாலு மகேந்திராவின் கடைசி திரைப்படம்… மூட்டு வலியிலும் இப்படி கஷ்டப்பட்டிருக்காரே!!