TMS: தமிழ் சினிமா பாடகர்களில் சிலர் குரலை கேட்டாலே மெய் மறந்திடுவோம். அந்த லிஸ்ட்டில் எப்போதுமே டி.எம்.செளந்தராஜனுக்கு இடம் உண்டு. ஆனால் அவருக்கு தன் பாடல் மூலமே ஒரு சோகம் நடந்து இருக்கிறதாம். அதுகுறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
1959-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியாக இருந்த படம் பாகபிரிவினை. சவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, நம்பியார் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அப்படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இணை தான் இசையமைப்பு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தி படத்துல ஏன் நடிக்கிறீங்க!.. வந்து விழந்த கேள்வி.. பத்திரிகையாளரிடம் எகிறிய விஜய் சேதுபதி!
இவர்களின் ஜோடி என்றாலே அந்த படத்தில் கண்டிப்பாக டி.எம்.செளந்தராஜன் இருப்பார். அப்படி பாகவிரிவினை படத்தில் அவருக்கு ஒரு பாடல் தயாராகி கொண்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக பாடல் ஒலிப்பதிவு சமயத்தில் அவரின் மூத்த மகனுக்கு உடல்நிலை கோளாறு ஏற்படுகிறது.
அவசர அவசரமாக அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். ரொம்பவே ஆபத்தான கட்டத்தில் அவர் இருக்க அருகில் செளந்தராஜன் அழுதுக்கொண்டு இருந்து இருக்கிறார். இருந்தும், கொடுத்த வாக்கை காப்பாற்ற பாட்டு ஒலிப்பதிவுக்கு கிளம்பிவிட்டாராம்.
எப்போதுமே ஒன்னுக்கு, இரண்டு முறை பாடிக்காட்டி ஓகேவாங்கிய பிறகே ரெக்கார்டிங் ரூமுக்குள் செல்வாராம். ஆனால் இந்த பாட்டுக்கு ஒரே முறை பாடிவிட்டு நேரே போய் ஒரே டேக்கில் ரெக்கார்டிங்கை முடித்துவிட்டு வெளியில் வந்தாராம். வந்த சில நிமிடங்கள் கூட நிக்காமல் மருத்துவமனை கிளம்பிவிட்டார். ஆனால் அங்கு அவர் மகன் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி தான் காத்துக்கொண்டு இருந்ததாம்.
இதையும் படிங்க: சிவாஜி அப்பவே பதில் சொல்லிட்டார்!.. கலைஞர் 100 விழாவில் ஏழரையை இழுத்து வசமாக சிக்கிய ரஜினி..
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…