ஒரே பாடலில் உலகப்புகழ் பெற்ற டி.எம். சவுந்தரராஜன்.. எந்த பாட்டு தெரியுமா?..

by சிவா |   ( Updated:2023-05-04 06:06:11  )
tms
X

tms

தமிழ் சினிமா வராலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வசீகர குரலால் பல பாடல்களை பாடியவர் டி.எம். சவுந்தரராஜன். இவர் சினிமாவிற்கு வந்தது நடிக்க வேண்டும் என்கிற ஆசையில்தான். ஆனால், குரல் வளம் நன்றாக இருந்ததால் இவரை பாடகராக்கி விட்டனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடலை அவர் பாடியுள்ளார்.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருக்கு ஆஸ்தான பாடகராக இருந்தவர். எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் ஏற்றவாறு குரலை மாற்றி பாடல்களை பாடியவர். எம்.ஜி.,ஆர் - சிவாஜி நடிப்பில் வெளியவந்த 95 சதவீதம் படங்களில் பாடியவர் டி.எம்.எஸ். மட்டுமே.

இளம் வயதிலேயே முறையாக இசையை கற்றவர் இவர். 1950ம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ராதே என்னை விட்டு போகேதடி’ பாடல்தான் இவர் பாடிய முதல் பாடலாகும். அதன்பின் 1964ம் ஆண்டு வெளியான அருணகிரிநாதர் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்கிற பக்தி பாடல் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் டி.எம். சவுந்தரராஜன் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story