இந்த பாட்டு நாகேஷுக்கா?!.. கிண்டலடித்த டி.எம்.எஸ்.. ஆனா நடந்தது பெரிய மேஜிக்..
திரையுலகில் கிண்டல், அவமானம், அசிங்கப்படுவது எல்லாம் சகஜம். ஆனால், எல்லாவற்றையும் தாண்டித்தான் தன்னை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால்தான் நீடித்து நிற்க முடியும். பல நடிகர்கள் அவமானத்தை தாண்டித்தான் சினிமாவில் தாக்குபிடித்து ஒரு இடத்தை பிடித்தனர். இதில், நடிகர் நாகேஷும் ஒருவர்.
காமெடி நடிகராக நடிக்க துவங்கி ஒருகட்டத்தில் கதையின் நாயகனாகவும் நடித்தார். அவரை ஹீரோ ஆக்கியதில் பாலச்சதர் முக்கியமானவர். எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் எனும் சிறப்பான படங்களில் நாகேஷை நடிக்க வைத்தவர் அவர். சர்வர் சுந்தம் படத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழை இளைஞர் ஒருவர் சினிமாவில் நுழைந்து புகழின் உச்சிக்கு செல்வதுபோல் கதை அமைத்திருப்பார். இப்படத்தில் நாகேஷும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்த படத்தில் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்கிற பாடல் இடம் பெற்றிருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான இந்த பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருப்பார். அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய ஹீரோக்களுக்கு பாடிக்கொண்டிருந்தவர் அவர். இந்த பாடலை பாடும்போது எம்.எஸ்.வி அவரை பெண்டு கழட்டிவிட்டாராம்.
பாடலை பாடி முடித்தபின் ‘இந்த பாடல் யாருக்கு?’ என கேட்டுள்ளார் டி.எம்.எஸ். அந்த படத்தில் மற்றொரு கதாநாயகனாக முத்துராமன் நடித்திருப்பார். எனவே அவருக்குதான் அந்த பாடல் என டி.எம்.எஸ் நினைத்துள்ளார். ஆனால், நாகேஷுக்கு என கூறியதும் ‘ஒரு காமெடி நடிகருக்கா நான் இப்படி கஷ்டப்பட்டு பாடினேன்!.. தியேட்டரில் இந்த பாடல் வரும் போது எல்லோரும் டீ குடிக்க சென்றுவிடுவார்கள்’ என கிண்டலடித்தாராம்.
எனவே, இந்த பாடலை எப்படியாவது ரசிகர்களை ரசிக்க வைக்க வேண்டும் என நினைத்த பாலச்சந்தர் எம்.எஸ்.வியின் இசையில் டி.எம்.எஸ் பாடுவது போல் அப்பாடலை துவக்கி, படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பதையும் காட்டி, நாகேஷையும் அசத்தலாக நடனம் ஆட வைத்து அப்பாடலை எடுத்தார். எனவே, தியேட்டரில் அந்த பாடலுக்கு ரசிகர்களின் விசில் பிறந்தது.
இதையும் படிங்க: வீரப்பன் ஒரு ராட்சஷன்.. வீரப்பனுக்கும் ரஜினிக்கும் இடையே நடந்த மோதல்! – இப்படியெல்லாம் நடந்துச்சா?