திரையுலகில் எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு ஆஸ்தான பாடகராக பல ரம்மியமான பாடல்களை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். நாகேஷ், ஜெய் கணேஷ், முத்துராமன் உள்ளிட்ட பலருக்கும் அவர் பாடியிருந்தாலும் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அவர் பாடிய பாடல்கள் காலத்தையும் தாண்டி நிற்கும். இப்போதும் அவர்களின் பாடல்கள் பலருக்கும் ஃபேவரைட்டான ஒன்றுதான். சினிமா பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் டி.எம்.எஸ் பாடியுள்ளார்.
குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என குரலில் வித்தியாசம் காட்டி பாடினார். பல நூறு பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கதாபாத்திரம் எந்த மன நிலையில், எந்த சூழலில் அந்த பாடலை பாடுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் பாடுவதில் அவருக்கு நிகர் அவரே.
சிவாஜி நடித்து 1968ம் வருடம் வெளியான திரைப்படம் உயர்ந்த மனிதன். இந்த படத்தில் சிவாஜி பெரிய கோடீஸ்வரராக இருப்பார். ஆனால், அவர் மனதில் நிம்மதி இருக்காது. திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது. கடமைக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார். அப்போது அவரின் நண்பர் மேஜர் சுந்தரராஜனுடன் சுற்றுலா செல்வார்.
அப்போது மிகுந்த சந்தோஷத்தோடு ஒரு பாடல் பாடுவார். அதுதான் ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே’ என்கிற பாடல் இந்த பாடலை பாடிய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட டி.எம்.எஸ் ‘சிவாஜி ஓடி வந்து மூச்சி வாங்கி கொண்டே அந்த பாடலை பாட துவங்குமார். எனவே, நானும் அப்படியே பாடுவது என முடிவெடுத்தேன். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் நான் சொல்லும் போது இசையை துவங்குகள் என கூறிவிட்டு. ஓடி வந்து மூச்சிறைக்க அந்த பாடலை பாடினேன். அந்த பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது’ என பேச கூறினார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…