பாட்டு எல்லாமே சூப்பர் ஹிட்!. ஆனாலும் வாய்ப்பே இல்ல.. டி.எம்.எஸ் தொடர்ந்து பாடாத காரணம்!..

தமிழ் சினிமா ரசிகர்களிடம் சிம்மக் குரலாக ஒலித்தவர்தான் டி.எம்.சவுந்தரராஜான். கருப்பு வெள்ளை காலத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வந்தார் சவுந்தரராஜன். சில பக்தி படங்களிலும் நடித்தார். ஆனால், உங்கள் நடிப்பு வேண்டாம்.. குரலை கொடுங்கள் என வாங்கி கொண்டது தமிழ் சினிமா.

60களில் முன்னணி நடிகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என இரண்டு ஆளுமைகளுக்கும் பின்னனி பாடல்களை பாடியது இவர்தான். எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என குரலை மாற்றிப்பாடி ரசிகர்களை கவர்ந்தார். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சினிமாவில் அறிமுகமானது முதல் சினிமாவில் ரிட்டயர்ட் ஆகும் வரை அவர்களுக்கு 90 சதவீத பாடல்களை பாடியது டி.எம்.எஸ்-தான்.

இதையும் படிங்க: கனகாவ பாத்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்!.. எதுவும் சொல்ல விரும்பல!.. பீலிங்ஸ் காட்டும் ராமராஜன்!..

அதேநேரம் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் என புதிய பாடகர்களை தங்கள் படங்களில் பாட வைத்தனர். எனவே, டி.எம்.எஸ் பாடும் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து போனது. இதனால் அவர் எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்டாலும் எதையும் தடுக்க முடியவில்லை.

ஆபாவாணன் தயாரிப்பில் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சத்தியராஜ் நடித்து 1989ம் வருடம் வெளியான படம்தான் தாய்நாடு. இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார். அப்போது பல புதிய பாடகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாடிக்கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…

அவர்கள் பாடி சில படங்கள் தாய்நாடு படத்தோடு வெளியானது. ஆனால், அந்த பாடல்கள் ஹிட் அடிக்காத நிலையில் தாய்நாடு படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால், அவர்கள் எல்லோரும் ஆபாவாணனிடம் சென்று ‘டி.எம்.எஸ் 45 வருடங்களாக பாடிவிட்டார். இன்னும் நீங்கள் அவரை பாட வைத்தால் எங்கள் நிலைமை என்னாவது?’ என புலம்பி இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை ஆபாவணன் டி.எம்.எஸ்-ஐ சந்தித்தபோது சொல்லியிருக்கிறார். இந்த தகவலை ஊடகம் ஒன்றில் கூறிய டி.எம்.எஸ். ‘அந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தும் எந்த இசையமைப்பாளர்களும் என்னை அழைக்கவில்லை.. அதன்பின் நான் அதிகம் பாடவில்லை’ என சொல்லி இருந்தார்.

 

Related Articles

Next Story