Connect with us

Cinema History

கஷ்டப்பட்டு நான் பாடினது அந்த நடிகருக்கா?!.. கடுப்பான டி.எம்.எஸ்.. அட அந்த சூப்பர்ஹிட் பாட்டா!..

தமிழ் சினிமாவில் 1950 முதல் 70வரை பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு பல நூறு பாடல்களை பாடியிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் ஆஸ்தான பாடகராகவே டி.எம்.எஸ் இருந்தார். மேலும், எம்.ஜி.ஆர் எனில் ஒரு மாதிரியும், சிவாஜி எனில் ஒரு மாதிரியும் குரலை மாற்றி பாடும் வித்தைக்காரர். சினிமாவில் நடிக்க வந்து பின்னர் பாடகராக மாறியவர் இவர். சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சில பாடகர்களுக்கு சில பாடல்கள் பெண்டு கழண்டு விடும். இசையமைப்பாளர் தனக்கு வேண்டியது வரும் வரைக்கும் திரும்ப திரும்ப பாட வைத்து ஒருவழி செய்து விடுவார்கள். அப்படி டி.எம்.எஸ் பாடிய சில பாடல்களில் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலும் ஒன்று. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் நாகேஷ், முத்துராமன், கே.ஆர். விஜயா என பலரும் நடித்து 1964ம் வருடம் வெளியான சர்வர் சுந்தரம். படத்தில் இடம் பெற்ற பாடல்தான் இது.

இதையும் படிங்க: எனக்கு பாட வாய்ப்பே வராம போனதற்கு அந்த பாட்டுதான் காரணம்!.. புலம்பிய டி.எம்.எஸ்..

tms

tms

இந்த பாடல் சிறப்பாக வரவேண்டும் என நினைத்த இயக்குனரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பல கரெக்‌ஷன்களை சொல்லி டி,எம்.எஸ்-ஐ பாட வைத்துள்ளனர். இப்படத்தில் முத்துராமன் நடித்ததால் அவருக்குதான் இந்த பாடல் என மிகவும் மெனக்கெட்டு பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

Nagesh

Nagesh

ஆனால், பாடல் முடிந்த பின் இந்த பாடல் நாகேஷுக்கு என சொல்ல கோபமடைந்த டி.எம்.எஸ் ‘நாகேஷ் ஒரு காமெடி நடிகர். நான் ஹீரோவுக்கு என நினைத்துதான் கஷ்டப்பட்டு இந்த பாடலை பாடினேன். இதற்கு எப்படி நாகேஷ் பொருத்தமாக இருப்பார்?.. இதற்குத்தான் என்னை இவ்வளவு வேலை வாங்கினீர்களா?.. அவர் நடித்தால் இந்த பாடல் எப்படி மக்களிடம் ரீச் ஆகும்?’ என கேட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.

ஆனால், படம் வெளியான பின் அவர் சொன்னதற்கு நேர்மாறாக இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இதைக்கேள்விப்பட்ட டி.எம்.எஸ் ‘ஓ நாகேஷுக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா’ என ஆச்சர்யப்பட்டாராம்’

இதையும் படிங்க: அந்த பாட்ட ஓடி போய் மூச்சிறைக்க பாடினேன்!.. டி.எம்.எஸ். பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top