அஜித் ரசிகர்களை வளைக்கும் அரசியல்வாதிகள்!. செம ஸ்கெட்ச்சா இருக்கே!…

by சிவா |   ( Updated:2025-04-11 02:36:12  )
அஜித் ரசிகர்களை வளைக்கும் அரசியல்வாதிகள்!. செம ஸ்கெட்ச்சா இருக்கே!…
X

Good bad ugly: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார். அமராவதி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியர். காதல் படங்களில் தொடர்ந்து நடித்து பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி ஒரு கட்டத்தில் மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் இருந்தது. ஆனால், அவர்களில் சிலர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தனது ரசிகர்கள் மன்றங்களையே அஜித் கலைத்துவிட்டார்.

ஏனெனில், அரசியலில் அஜித்துக்கும் கொஞ்சமும் ஆர்வம் இல்லை. அதோடு, தன்னுடைய ரசிகர்கள் அரசியலில் ஈடுபடுவதையும் அவர் விரும்பவில்லை. எனவே, அரசியலில் இருந்தே அவர் ஒதுங்கி இருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஜித் மீது அன்பு இருந்தது. தனக்கு ஒரு மகன் இருந்தால் இப்படித்தான் இருப்பான் என அவர் நினைத்ததாகவும் சொல்லப்பட்டது. எனவே, அதிமுகவில் இணைந்து கொள்ளுங்கள் என அவர் அஜித்திடம் கேட்டப்போது அதை அஜித் மறுத்துவிட்டார் என செய்திகள் உண்டு.

அஜித் மிகவும் வெளிப்படையானவர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவரை மேடையில் வைத்துக்கொண்டே ‘விழாக்களுக்கு வரமுடியாது என சொன்னால் மிரட்டுகிறார்கள்’ என தைரியமாக சொன்னவர்தான் அஜித். அதற்கு ரஜினி எழுந்து கை தட்டினார். அதன்பின் அஜித் ரசிகர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவு போல சிலர் காட்டிகொண்டார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் அஜித் செக் வைத்தார்.

இப்போது அவரின் குட் பேட் அக்லி உருவாகியுள்ளது. திமுக மேடைகளில் அசிங்காமாக பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி டிவிட்டரில் ‘குட் பேட் அக்லி படம் பார்க்கப்போகிறேன்’ என பதிவிட்டிருந்தார். அதேபோல், திமுக அமைச்சர் கீதா ஜீவன் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று அஜித் ரசிகர்களுடன் படம் பார்த்தார். மேலும், ஒரு பெரிய கேக்கையும் வெட்டி அஜித் ரசிகர்களுக்கு கொடுத்தார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

விஜய் இப்போது அரசியலுக்கு போய்விட்டார். அதோடு, திமுகவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சினிமா உலகில் விஜய்க்கு போட்டியாக இருப்பவர் அஜித். எனவே, குட் பேட் அக்லி படம் மூலம் அஜித் ரசிகர்களை தங்கள் பக்கம் வளைக்கவே திமுகவை சேர்ந்தவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story