பல்லவி ஹீரோயினு சொன்னதும் ஆடிப்போன ராமராஜன்! ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
Ramarajan: ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்று சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் ராமராஜன். அதனாலயே முதலில் நான்கு திரைப்படங்களை இயக்கிய பின்னரே அவர் நடிகராக மாறினார். 80 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் ராமராஜன். அதுவரை ரஜினி, கமல், விஜயகாந்த் என மும்மூர்த்திகளாக இந்த சினிமாவை ஆண்டு கொண்டு வந்திருந்த நிலையில் திடீரென முளைத்த புதிய விதையாக இவரின் வளர்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒரு சாமானியனாக தோன்றிய ஒருவர் இந்த அளவு குறுகிய காலத்தில் ரஜினி கமலுக்கு இணையான ஒரு பெரும் புகழை அடைகிறார் என்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் இருக்காது? அப்படி ரஜினி, கமல் படங்களுக்கே டப் கொடுக்கும் வகையில் ராமராஜன் படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருந்தது.
இதையும் படிங்க: இப்படி பாடினா பல்லை உடைச்சிடுவேன்!. எஸ்.பி.பியை திட்டிய எம்.எஸ்.வி!.. நடந்தது இதுதான்!…
இந்த நிலையில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜனும் தனது படங்களின் மூலம் பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல விரும்புபவர். அதனாலேயே எம்ஜிஆரை போல ராமராஜனும் சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது என இந்த மாதிரி காட்சிகளில் இதுவரை நடித்ததே இல்லை. அதே மாதிரியான ஒரு இன்னொரு விஷயமும் அவர் நடித்த ‘என்ன பெத்த மகராசா’ திரைப்படத்திலும் நடந்திருக்கிறது.
1989 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை சிராஜ் இயக்க ராஜ்கிரண் இந்த படத்தை தயாரித்தார். இதில் ராமராஜனுடன் ரூபினி, ஸ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஆரம்பத்தில் இந்த படத்தில் ராமராஜனுக்கு இரண்டு ஹீரோயின்களாம். ஒன்று ரூபினி மற்றொருவர் பல்லவி. ஆனால் படத்தின் பூஜை எல்லாம் போடப்பட்டு டைட்டிலில் இரண்டு ஹீரோயின் பெயரை பார்த்ததும் ராமராஜனுக்கு ஒரே அதிர்ச்சியாம்.
இதையும் படிங்க: முதல் நாளே ஈஸ்வரி ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கே… கோபிக்கு இது தேவைதான்?
அதுவரை அவருக்கு இந்த படத்தில் இரண்டு ஹீரோயின் என்பது தெரியாதாம். உடனே இயக்குனரை அழைத்து இது எனக்கு தெரியாதே எனக் கூறியிருக்கிறார். மேலும் இரண்டு ஹீரோயின்கள் என்றால் எப்படி எனக்கு ஜோடி என்பதையும் விசாரித்திருக்கிறார். அதற்கு இயக்குனர் ஒரு ஹீரோயின் லவ் பண்ணுவதற்காக. மற்றொரு ஹீரோயின் கல்யாணம் செய்வதற்காக என கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டதும் ராமராஜன் இப்படி என் படத்தில் வைக்க நான் அனுமதிக்க மாட்டேன். வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கையிலேயே நான் வாழ்பவன். அதனால் ஒரே ஒரு ஹீரோயினை மட்டும் ஒப்பந்தம் செய்யுங்கள் எனக் கூறி ரூபினையை இந்த படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஜெமினியை தன்னுடன் நடிக்க வைக்க விரும்பாத எம்ஜிஆர்! இப்படிலாமா யோசிப்பாரு நம் பொன்மனச்செம்மல்?