பாக்கியலட்சுமி: பழிவாங்கிய ராதிகாவை புகழ்ந்து தள்ளிய கோபி… ஓட்டிங்கில் மொத்தமாக கவுந்த பாக்கியா..!

by Akhilan |
பாக்கியலட்சுமி: பழிவாங்கிய ராதிகாவை புகழ்ந்து தள்ளிய கோபி… ஓட்டிங்கில் மொத்தமாக கவுந்த பாக்கியா..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அம்ருதாவின் காலேஜ் ஐடியை கணேஷ் கண்டுப்பிடித்து விடுகிறார். இதையடுத்து அவரின் அப்பாவும், அம்மாவும் ரூம் கதவை மடமடவென தட்டுகின்றனர். இதையடுத்து அவர்களின் கதவினை திறந்து விடுகிறார். அவர்களிடம் அம்ருதா ஐடியை காட்டி கேட்கிறார்.

நாங்க தான் அம்ருதாவை படிக்க வைத்தோம். நீதான ஆசைப்பட்ட எனக் கூறுகிறார். சென்னையில் இருந்து படிக்கவைத்தோம் என்கிறார். நீங்க இத்தனை நாள் சொன்ன கதைக்கும் இதுக்கும் சுத்தமாக சம்மந்தமே இல்லை என்கிறார் கணேஷ். கவலையை விடு சீக்கிரமா அம்ருதாவை கண்டுபிடித்து கூட்டி வந்து விடலாம் என்கிறார்.

இதையும் படிங்க: அடிபொலி!.. நைட்டே சம்பவத்தை ஆரம்பித்த லியோ டீம்.. இன்னைக்கு செம கச்சேரி இருக்கு போல!..

வீட்டுக்கு கடுப்புடன் வரும் கோபியிடம் பாக்கியாவின் கேண்ட்டீனை கேன்சல் செய்து விட்டதாக கூறுகிறார். இதில் கோபி எவ்வளவோ கஷ்டத்துல வந்தேன். இதை கேட்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அவளுக்கு தேவைத்தான். நீ செய்றது தான் சரி என்கிறார்.

ராதிகா அலுவலகத்தில் உங்களுக்கு இமெயில் அனுப்பியதை போல ஈஸ்வரி கேண்ட்டீன் நடத்தலாமா வேணாமா என ஓட்டிங் செய்ய வேண்டும் என்கிறார். பாக்கியாவும் தனக்கு ஓட்டு போட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார். ஓட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

பாக்கியாவை சீண்டும் ராதிகா இது என் ஆபீஸ். என்னை மீறி உங்களுக்கு எப்படி வோட் போடுவாங்க எனக் கேட்கிறார். அதை கேட்டு அதிர்ச்சியாகிறார் பாக்கியா. தொடர்ச்சியாக வேண்டாம் என சிலர் வோட்டு போடுகின்றனர். அதையடுத்து நடந்த கணக்கெடுப்பில் வேண்டும் என சொன்னவர்களை விட அதிகளவில் பாக்கியா வேண்டாம் என வோட் போட்டு இருக்கின்றனர். இதனால் பாக்கியா அதிர்ச்சியடைகிறார்.

இதையும் படிங்க: கதை பிடித்துப் போக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகை! இப்ப யாராச்சும் அப்படி இருக்கீங்களா?

இதனால் மனம் உடைந்து தன்னுடைய குடும்பத்திடம் சொல்லி அழுகிறார் பாக்கியா. வீட்டில் இருந்தவர்கள் ராதிகா மீது ரொம்பவே கோபம் ஆகின்றனர். சாப்பாடு போட்டத மறந்துட்டு எப்படி இப்டி ஒரு வோட்டு போட்டாங்க என்கிறார். அவங்க தான் ஆபிஸை பார்க்குறாங்க? அதான் அவங்களுக்கு சப்போர்ட் செய்றாங்க எனக் கூறுகிறார்.

தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுகும் பாக்கியாவை எழில் சமாதானப்படுத்துகிறார். வீட்டில் இருந்தவர்கள் பாக்கியாவை அழுகாதே, எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் சொல்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story