இந்த வயசுல உனக்கு எதுக்கு செல்லம் ஆன்மீகம்?… ரசிகர்களை கலங்கடித்த இளம் நடிகை!

Published on: November 23, 2024
sreeleela
---Advertisement---

மருத்துவராக இருந்தாலும் நடிப்பின் மீது தீவிர ஆர்வம் கொண்டதால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஸ்ரீலா.

அறிமுகம் கன்னட படமென்றாலும் குண்டூர் காரம் படத்தின் ஒரே ஒரு பாடல் இதுவரை இல்லாத உச்சத்தினை அளித்துள்ளது. ஹீரோயினாக புக் செய்திட ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் காத்துக் கிடக்கின்றனர். அடுத்ததாக புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் வேறு குத்தாட்டம் போட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க இருக்கிறார்.’

இதையும் படிங்க: ரிலீசுக்கு முன்பே 1000 கோடி!.. அட்வான்ஸ் புக்கிங்கிலும் வசூலை அள்ளும் புஷ்பா 2!…

அம்மணியின் கைவசம் 3 தெலுங்கு படங்கள் இருக்கின்றன. கோலிவுட்டில் அறிமுகம் செய்திட அனைவரும் துடியாய் துடித்து வருகின்றனர். இந்தநிலையில் ஸ்ரீலீலா செய்த செயலால் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆடிப்போய் இருக்கின்றனர்.

கங்கை கரைக்கு சென்று ஆன்மீகத்தில் தான் திளைத்த படங்களை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாக வெளியிட்டு இருக்கிறார். பெரிதாக ஒப்பனைகள் இன்றி படகில் சுடிதார் அணிந்து செம அழகுடன் காட்சி அளிக்கிறார்.

sreeleela
#image_title

நெற்றியில் திருநீறு, குங்குமம், கையில் கயிறு கட்டி சிரிப்பது போல புகைப்படம் சுண்டி இழுக்கிறது. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் ‘ஆன்மீகமாக தரிசனம் எல்லாம் இந்த வயசுல உனக்கும் வேண்டாம் பேபி’ என அவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வேறு சிலரோ உடற்பயிற்சி, ஆன்மிகம் என 23 வயதிலேயே ஸ்ரீலீலா மிகுந்த முதிர்ச்சியுடன் இருக்கிறார். படங்களை தேர்வு செய்து நடித்தால் இந்தியா சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: வலிக்குதுடா!… ஆர்ஜே பாலாஜிய இப்படி கதறவிட்டீங்களே?!… பட்டையை கிளப்பிய ‘சொர்க்கவாசல்’ ட்ரெய்லர்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.