இந்தியன் 2 டிரெய்லரை பார்த்து ஹேப்பியான டோலிவுட் ரசிகர்கள்!.. கமலுக்கே இப்படின்னா அவருக்கு!..
106 வயசு இந்தியன் தாத்தாவாக நடித்துள்ள கமல்ஹாசனுக்கே இந்தளவுக்கு ஆக்ஷன் காட்சிகளை ஷங்கர் வைத்து அதகளப்படுத்தியிருக்காரே அப்போ கேம் சேஞ்சர் படத்தில் நம்ம ராம் சரணுக்கு ஆக்ஷன் பிளாக் எல்லாம் அந்தரா இருக்குமே என ஆந்திரா ரசிகர்கள் எல்லாம் கேம் சேஞ்சர் படத்துக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை ஒரே நேரத்தில் ஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கி வந்தார். இந்தியன் 2 படத்தை முதலில் ரிலீஸ் செய்து விட்டு ராம் சரண் படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு அவர் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: இந்த போஸ் எப்படி இருக்கு? வெளியான ரஜினியின் நியூ லுக்.. பக்கத்துல யார் நிக்குறாங்கனு பாருங்க
ராம்சரண், கியாரா அத்வானி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ரயில் ஸ்டன்ட் காட்சியை எல்லாம் ஷங்கர் படமாக்கியுள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் டிரெய்லரை பார்த்து விட்டு தமிழ்நாட்டில் ரசிகர்கள் 28 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட பழைய இந்தியன் போல இல்லை என புலம்பித் தவிக்கும் நேரத்தில், ராம்சரண் ரசிகர்கள் ஷங்கரின் பிரம்மாண்ட விஷுவல்ஸ் மற்றும் அதிரடி ஆக்ஷன் பிளாக்குகளையும் டூபீஸ் உடையணிந்த பெண்ணின் வயிற்றில் ஓடும் ஆமைக் காட்சிகளையும் பார்த்து ஆஹா என வாய் பிளந்து போய்விட்டார்களாம்.
ராம்சரணின் கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்காகவது ரிலீஸ் பண்ணிடுங்க ஷங்கர் சார் உங்களுக்கு புண்ணியமாக போய் விடும் என்றும் இதே போல ஒரே ஒரு டீசரை மட்டும் இறக்கி எங்களை சந்தோஷப்படுத்துங்க என ராம் சரண் ரசிகர்கள் ஷங்கரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவாஜி படத்தை ரீமேக் செய்து கையை சுட்டுக்கொண்ட துயரம்… அட தயாரிப்பாளர் அந்த நடிகரா?..
தெலுங்கு ரசிகர்களை கவரும் விதத்தில் ஏகப்பட்ட மசாலாக்களை இந்தியன் 2 படத்தில் ஷங்கர் கொட்ட காரணமே அவர் ராம் சரண் உடன் இணைந்து படம் பண்ண ஆரம்பித்தது தான் என்கின்றனர்.
கூடிய சீக்கிரமே ராம்சரண் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போகும் அளவுக்கு கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட்டும் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 2 ரிலீஸை முடித்து விட்டு ஷங்கர் முழு வீச்சில் அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தசாவதாரத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுமா இந்தியன் 2? ரஜினிக்கு உள்குத்தா?