latest news

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும். அந்த வகையில் நாளை 4 படங்கள் வெளியாகின்அன. அவை என்ன என்பதை இங்கே காண்போம்.

  1. காளிதாஸ் 2

நடிகர் பரத் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் ‘காளிதாஸ்’. ஒரு நேர்மையான, அதேசமயம் அழுத்தமான காவல்துறை அதிகாரியாக பரத் அசத்திருப்பார் . அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியினைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ நாளை வெளியாகிறது. அதே டீமுன் பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்ணதி, பிரகாஷ் ராஜ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் பல திடுக்கிடும் சம்பவங்களுடன் பரபரப்பான திரைகதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  1. லீடர்

‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான லெஜெண்ட் சரவணன், தனது இரண்டாவது படைப்பாக ‘லீடர்’ திரைப்படத்துடன் நாளை களம் இறங்குகிறார். முதல்படமான தி லெஜெண்டில் சில குறைகள் இருந்தாலும் இந்தப் படத்திலும் பட்ஜெட்டில் மட்டுமல்ல தனது நடிப்பிலும் மெருகேறியிருக்கிறார் என்பது டிரைலரை பார்க்கையில் தெரிகிறது. கருடன் வெற்றியை அடுத்து துரை செந்தில் இயக்கியுள்ள படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பி மற்றும் சி சென்டர் பார்வையாளர்கள் மற்றும் மாஸ் ஆக்‌ஷன் படங்களை விரும்பும் ரசிகர்களை குறிவைத்து இந்தப் படம் வெளியாகிறது.

  1. கார்மேனி செல்வம்

இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் சமுத்திரக்கனி. சமூக அக்கறைகொண்ட கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் சொல்லும் அவரது நடிப்பில் நாளை வெளியாகும் படம் கார்மேனி செல்வம். சமுத்ரகனியுடன் கௌதம் மேனன், லட்சுமி பிரியா உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளின் மேன்மை, தற்போதைய சமூகத்தில் நடுத்தர மக்கள் சந்திக்கும் பொருளாதார மற்றும் வாழ்வியல் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

  1. நீளீரா

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ போன்ற படைப்புகள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நவீன் சந்திரா, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நீளீரா . எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவரது இந்தப் படமும் ஒரு வித்யாசமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஈழப்போரின் கொடூரமான உளவியலையும், தலைமுறை தலைமுறையாக தொடரும் துயரத்தையும் ஒரு திருமண வீட்டின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை வெளியாகும் இந்த படங்களில் எது வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

49 minutes ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

2 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

13 hours ago