ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என பார்ப்போம்.
இந்த வாரம் நிறைய சின்ன படஜெட் படங்கள் வெளியானாலும் கார்த்தியின் வா வாத்தியார் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கார்த்தியின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இவர் கங்குவா படத்தை தயாரித்தபோது ஒருவரிடம் 20 கோடிக்கும் மேல் கடன் வாங்கியிருந்தார்.
அதை திருப்பி கொடுக்காததால் அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். எனவே, நீதிமன்றம் இப்படத்தை வெளியிட தடை விதித்திருக்கிறது. அதேநேரம் இன்று இரவுக்குள் பணம் செலுத்தப்பட்டால் நாளை வா வாத்தியார் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
அடுத்து அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ள லாக் டவுன் படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல், மகா சேனா, மாண்புமிகு பறை, சல்லியர்கள், யாரு போட்ட கோடு போன்ற சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாகவுள்ளது.
மேலும், ரஜினியின் படையப்பா திரைப்படம் புதிய பொலிவுடன் நாளை ரீ-ரிலீஸாகவிருக்கிறது. இதை புரமோட் செய்து ரஜினியே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த படத்திற்கு அதிக அளவில் டிக்கெட் முன்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், பாலையா நடித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அகாண்டா 2 திரைப்படமும் நாளை தமிழில் வெளியாகவுள்ளது.
