
இந்த வருட பொங்கல் தான் ரசிகர்களை ஏமாற்றியது. பொங்கலுக்கு பெரும்பாலும் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக அந்த படத்தின் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டது. அது சம்பந்தமான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே திரைப்படமும் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த இரு படங்களை விட ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதனால் இந்த பொங்கல் ஜீவா பொங்கலாகவே முடிந்தது. அதன் பிறகு எந்த ஒரு புதிய படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையில் நாளை வெள்ளிக்கிழமை என்பதால் இரண்டு திரைப்படங்கள் ரிலீசாக இருக்கின்றன.
ஒன்று டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவந்த் ஹீரோவாக நடிக்கும் வித் லவ் திரைப்படமும் சாய் தன்சிகா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி திரைப்படமும் ரிலீஸ் ஆகின்றன. இதில் வித் லவ் திரைப்படத்திற்கு மவுசு அதிகமாகவே இருக்கிறது. அந்த படத்தின் பிரிமியர் ஷோவை பார்த்த பலரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வித் லவ் திரைப்படம் கண்டிப்பாக அழகி, 96, ஆட்டோகிராப் போன்ற படங்களின் வரிசையில் கண்டிப்பாக இணையும். காலத்துக்கும் அந்த படம் நின்னு பேசுபவையாக இருக்கும் என ஒரு பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர். அதனால் அந்த படத்திற்கு பெரிய அளவில் ஹைப் இருக்கிறது. இதில் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

நேற்று அவருடைய பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பிறந்தநாள் விருந்தாக சிம்பு ரசிகர்களுக்கு சிலம்பாட்டம் திரைப்படம் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் நாளை வித் லவ், யோகிடா மற்றும் சிலம்பாட்டம் போன்ற மூன்று திரைப்படங்கள் ரிலீசாக இருக்கின்றன.