பிரச்சினையே இதுதான்.. கோட் படம் மீண்டு வருமா? எல்லாம் அவர் கைல இருக்கு

Goat Movie: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்ற திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தில் விஜயுடன் சேர்ந்து சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா ,லைலா போன்ற எண்ணற்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த படம் பிரசாந்துக்கு சொன்னது… மொக்க காரணத்தால் மிஸ்ஸான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்..

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது இது ஒரு இன்டர்நேஷனல் ஆக்சன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சென்சார் தணிக்கை குழு கோட் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க :அவார்டு படம் எடுக்கணும்னு இப்படியா எடுப்பீங்க… கொட்டுக்காளியா… கொட்டும் காளியா?

அது மட்டுமல்லாமல் படத்தின் நீளம் 2.55 நிமிடம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே நீளம் கருதி பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறாத நிலையில் கோட் திரைப்படமும் அதே ஒரு பிரச்சனையை தான் சந்தித்து இருக்கிறது.

ஆனால் இந்த படத்தை பொருத்தவரைக்கும் போர் அடிக்காத வகையில் விறுவிறுப்பான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. படத்தின் கிளைமேக்ஸ்சில் அதாவது எண்டு கார்டு போடுவதற்கு 3 நிமிடத்திற்கு முன் வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறதாம்.

இதையும் படிங்க:ஆத்தாடி… இத்தனை மாசமா? கூலிக்காக ரஜினியையே இப்படியா படுத்துவீங்க லோகேஷ்..

திரைக்குப் பின்னால் நடந்த சில சுவாரசிய சம்பவங்களை வீடியோவாக எடுத்து வெங்கட் பிரபு படத்தோடு இணைத்திருக்கிறாராம் . இது ஒரு வகையில் விஜய்க்கு கொடுக்கும் ஃபேர்வெல் ட்ரீட் என்றும் சொல்லப்படுகிறது.

திரைக்குப் பின்னால் விஜயும் படக்குழுவும் எப்படியெல்லாம் இருந்தார்கள்?எந்த அளவு உற்சாகமாக இருந்தார்கள் என்பதை விளக்கும் ஒரு சின்ன கிளிம்ப்ஸ் வீடியோவாக தான் அது இருக்கப் போகிறது என சொல்லப்படுகிறது.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it