அட கேளுங்க!.. நயனின் திரைப்படத்திற்கு இந்த சிறப்பு உண்டா?.. இதுலயும் அம்மணி தான் டாப்!..

by Rohini |
nayan_main_cine
X

nayanathara

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நயன் அஜித்தின் பில்லா படத்தில் மொத்த கவர்ச்சியையும் காட்டி தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதன் பின்னர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்தார்.

nayan1_cine

nayanthara

பெண்களை மையப்படுத்தி அமையும் கதைகளில் நடித்து பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார் திருமணத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் நயன்.

இதையும் படிங்க : சிவாஜியை புடிக்கவே புடிக்காது!.. ஆனாலும் தைரியம் தான்!.. தில்லா கூறிய மேடைப்பேச்சு இயக்குனர்!..

nayan2_cie

nayanathara

இவரின் நடிப்பில் ஜவான், கனெக்ட், இறைவா, போன்ற பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனிடையில் பொதுவாகவே ஒரு படம் வெளியாகிறது என்றால் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் படம் முடிந்து விடும் . கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஒரு படம் திரையில் ஓடும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக நீளமான படம் என்று சிவாஜியின் படமும் அது கிட்டத்தட்ட 3 மணி நேரமும் 24 நிமிடமும் மிக குறைந்த நீளம் கொண்ட படமாக நயனின் புதிய படமான ‘கனெக்ட் ’ படமும் அமைந்துள்ளது. கனெக்ட் படம் சுமாராக 95 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறதாம்.

nayan3_cine

nayanathara

Next Story