2022ன் வெளியான டாப் 10 திரைப்படங்கள்... உங்க பேவரிட் படம் இருக்கா?
தமிழ் சினிமா கோவிட் பிரச்னையை தாண்டி இந்த வருடம் நிறைய படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்திருக்கிறது. 12 மாதத்தில் வெளியான மொத்த படங்களில் டாப் 10 எந்த திரைப்படங்கள் என தெரிந்து கொள்ளலாமா?
10. விருமன்:
விருமன் எம். முத்தையா எழுதி இயக்கிய திரைப்படம். 2டி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் சூர்யா தயாரித்த இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அறிமுக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் சுமார் வெற்றி தான்.
9. டான்:
டான் படத்தில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அறிமுகமாகி எழுதி இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர். சில ட்ரோல்கள் வாங்கினாலும் படம் நல்ல வசூலை பெற்றது.
8.வெந்து தணிந்தது காடு:
சிம்பு ஏகத்துக்கும் உடலை குறைத்து நடித்த படம். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில மொக்கைகளையும் வாங்கியது தான் உண்மை. சிம்பு நடிப்புக்கு ஒரு கூட்டமும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு ஒரு கூட்டமும் படத்தினை பார்த்தார்கள்.
7.சர்தார்:
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான படம் சர்தார். கார்த்தி, லைலா ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது.
6. திருச்சிற்றம்பலம்:
கலாநிதி மாறன் பிக்சர்ஸ் சார்பில் வெளியான படம் தான் திருச்சிற்றம்பலம். தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்திருந்தனர். ரொம்ப வருடம் கழித்து தனுஷ் மற்றும் அனிருத்தின் கூட்டணியில் இந்த படம் உருவாகி இருந்தது.
5. எதற்கும் துணிந்தவன்:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கிய திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பொள்ளாச்சி உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா நடித்திருந்தார். அவருடன் பிரியங்கா மோகன், சரண்யா, சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்த இப்படம் ஆக்ஷன் காட்சிகளில் சக்கை போடு போட்டது.
4. வலிமை:
வலிமை அப்டேட், வலிமை அப்டேட்னு அஜித் ரசிகர்கள் பண்ணிய அலப்பறைக்கு ஒரே அளவே இல்லாமல் இருந்தது இந்த படத்தில் தான். போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த இரண்டாவது படம். அஜித்தின் ஆக்ஷனுக்கும், ரேஸ் காட்சிகளுக்குமே படத்தினை பார்க்கலாம். அதுவே படத்திற்கு வசூலை அதிகரிக்க உதவியது. இந்த படத்தோட பட்ஜெட் 180 கோடி. மொத்த கலெக்ஷன் 280 கோடி.
3. பீஸ்ட்:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ரெட் ஜெயண்ட் விநியோகம் செய்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மொத்தமாக 290 கோடியை வசூல் செய்திருந்தது.
இதையும் படிங்க: வேண்டுமென்றே மனைவி ஷாலினியிடம் தோற்கும் அஜித்… அட இதலயும் இவர் அப்படித்தானா?!..
2.விக்ரம்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இப்படத்தில் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்தனர். கமலுக்கு ஒரு பெரிய ப்ரேக்கிற்கு பிறகு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 450 முதல் 500 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
1. பொன்னியின் செல்வன்:
பிரபல நாவலை சினிமாவாக்க சினிமாத்துறை நான்கு தலைமுறைகளாக போராடி உருவான படம் பொன்னியின் செல்வன். இப்படத்தினை மணிரத்னம் இயக்கி இருக்கிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் 500 கோடி வசூலை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.