2022ல் மக்கள் மனதில் நின்ற டாப் 10 சீரியல்கள்!.. அடக் கடவுளே இந்த சீரியலுக்கு வந்த கொடுமை!..
மக்கள் மனதில் சினிமா எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவுக்கு சீரியலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக சீரியல் இருக்கின்றது.
ஏராளமான தனியார் தொலைக்காட்சிகள் பல சீரியல்களை தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். வெள்ளித்திரையில் சம்பாதிக்க முடியாத ரசிகர்களை சின்னத்திரை மூலம் நடிகர்கள் சம்பாதித்து விடுகின்றனர். ஏன் வெள்ளித்திரையில் இருந்து கூட பல நட்சத்திரங்கள் சீரியலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ‘மோட்டா சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜிக்கு வைத்த செக்!.. இயக்குனர் போட்ட பலே திட்டம்!..
அந்த வகையில் எந்தெந்த சீரியல்கள் எந்தெந்த இடங்களை பிடித்திருக்கின்றன என்று முதல் பத்து இடங்களை பிடித்திருக்கும் சீரியல்களின் லிஸ்டுகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. அந்த வகையில் பத்தாவது இடத்தில் பிடித்திருக்கும் சிரியல் விஜய் டிவியில் நீண்ட நாள்களாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்தான். அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் சீரியல் முதலில் விறுவிறுப்பாக ஒடிக் கொண்டிருந்த நேரத்தில் இடையிடையே காட்சிகள் ஜவ்வாக இழுக்க ஆரம்பித்து விட்டன. முதல் இடத்தில் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமே.
ஒன்பதாவது இடத்தில் அதே விஜய்டிவியில் ஒளிப்பரப்பாக கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’சீரியல். கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினையை எப்படி மனைவி சமாளிக்கிறாள் என்பதே இந்த சீரியலின் கதை. அடுத்த எட்டாவது இடத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘ஆனந்த ராகம்’சீரியல். சமீபத்தில்தான் இந்த சீரியல் ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக் ஏழாது இடத்தில் ‘பாக்யலட்சுமி’ சீரியல். சமீபகாலமாக இந்த சீரியல் இப்பொழுதுதான் சூடு பிடித்திருக்கிறது.
ஆறாவது இடத்தில் ‘எதிர் நீச்சல்’ சீரியல். அநேக பெண்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இது மாறிவிட்டது. அடுத்து ஐந்தாவது இடத்தில் ‘ரோஜா’ சீரியல் . இது சமீபத்தில்தான் முற்றுப் பெற்றது. இருந்தாலும் இந்த சீரியலுக்கு அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அடுத்த நான்காவது இடத்தில் ‘கண்ணானே கண்ணே’ சீரியல். தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாசப்போராட்டம் பற்றிய கதைதான் இது.
அடுத்த மூன்றாவது இடத்தில் ‘வானத்தைப் போல’சீரியல். அடுத்த இரண்டாது இடத்தில் ‘சுந்தரி’ சீரியலும் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் சீரியல் ‘கயல் ’ சீரியல். கயல் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்துவருகின்றனர். மேலும் கயல் சீரியல் ஆரம்பித்த தேதியில் இருந்து இன்று வரை டிஆர்பியில் முதலிடத்திலேயே இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் முதல் ஆறு இடங்களை பிடித்திருப்பது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியலாகும்.