உலகநாயகனையே ஓவர் டேக் செய்த தனுஷ்... டாப் 10 வசூல் படங்கள்..!

by sankaran v |
dhanush kamal
X

dhanush kamal

2024ல் தமிழ்சினிமாவில் பெரிய அளவில் படங்கள் வசூல் சாதனையைப் பெறவில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் கமலின் இந்தியன் 2 படம் பெருமளவில் கைகொடுக்கும் என்று நம்பினார்கள். அதுவும் காலை வாரி விட்டது. எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை. மாறாக படத்தின் மீது அதிகளவு நெகடிவ் விமர்சனங்களே வந்தது. அதன்பிறகு வந்த ராயன், தங்கலான் படங்கள் கொஞ்சம் கைகொடுத்துள்ளன என்றே சொல்ல வேண்டும்.

விக்ரம் நடித்த தங்கலான் படம் ரஜினிகாந்தின் லால்சலாம் வசூலை இரண்டே நாளில் முறியடித்துள்ளது. இதன் மூலம் 2024ல் டாப் 10 படங்களுக்குள் விக்ரம் நுழைந்துள்ளார். சுதந்திர தினத்தன்று வெளியான 10 தென்னிந்திய படங்களில், விக்ரமின் தங்கலான் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது. 2 நாளில் 18 கோடியை எட்டிய இந்தப் படம் வார இறுதியில் 25 கோடியை எட்ட வாய்ப்புள்ளது. இப்போது 2024ல் அதிக வசூல் செய்த முதல் 10 தமிழ் படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

தனுஷ் நடித்த ராயன் படம் 93.80 கோடியை வசூலித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தான் உலகநாயகன் கமலின் இந்தியன் 2 படம் உள்ளது. இதன் வசூல் 83 கோடி. 3வது இடத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் உள்ளது. இதன் வசூல் 71.30 கோடி. 4வது இடத்தில் சுந்தர்.சி.யின் அரண்மனை 4 படம் உள்ளது. இதன் வசூல் 68 கோடி.

thangalan

thangalan

தொடர்ந்து 5வது இடத்தைப் பிடிப்பது சிவகார்த்திகேயனின் அயலான் படம். இது 49.50 கோடியை வசூலித்துள்ளது. 6வது இடத்தில் சூரி நடித்த கருடன் படம் 43.50 கோடி வசூலித்துள்ளது. 7வது இடத்தை தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் பிடித்துள்ளது. இதன் வசூல் 43 கோடி.

8வது இடத்தை பிடித்த ஸ்டார் படம் 20 கோடி வசூலை அள்ளியுள்ளது. தொடர்ந்து 9வது இடத்தில் தங்கலான் 18.05 கோடியுடன் கம்பீரமாக நடைபோட்டு வருகிறது. 10வது இடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் உள்ளது. இதன் வசூல் 17.50 கோடி.

மேற்கண்ட பட்டியலைப் பார்க்கும் போது உலகநாயகன் கமலின் படமான இந்தியன் 2, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது தனுஷின்; படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story