தமிழ்ப்பட உலகின் டாப் 10 தயாரிப்பு நிறுவனங்கள்... பரபரப்பாக தயாராகி வரும் படங்கள்

New Projects
தமிழ்ப்பட உலகில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள வகையில், 10 தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் பற்றியும், யார் யார் நடித்து வருகிறார்கள் என்பது பற்றியும் பார்க்கலாம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் கமல், ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களைத் தயாரித்துள்ளது. நம்ம வீட்டு பிள்ளை, அண்ணாத்தே, பீஸ்ட், ஜெய்லர் படங்கள். தற்போது தனுஷ் 50 படத்தைத் தயாரித்து வருகிறது.
லைகா நிறுவனம் தர்பார், கத்தி, பொன்னியின் செல்வன், சந்திரமுகி 2, லால் சலாம் போன்ற சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தது. தற்போது இந்தியன் 2, விடாமுயற்சி, வேட்டையன் படங்களைத் தயாரித்து வருகிறது.
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் பிகில், லவ் டுடே, இரும்புக்குதிரை, தனி ஒருவன் படங்களைத் தயாரித்தது. தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன் நடிக்கும் கோட் படத்தைத் தயாரித்து வருகிறது.
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ஆளவந்தான், அசுரன், கர்ணன், துப்பாக்கி உள்பட பல படங்களைத் தயாரித்துள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கஜினிகாந்த், டெடி, மிஸ்டர் லோக்கல், பத்து தல உள்பட பல படங்களைத் தயாரித்துள்ளது. வா வாத்தியாரே, தங்கலான், கங்குவா ஆகிய பிரம்மாண்ட படங்களைத் தற்போது தயாரித்து வருகிறது.

Thangalan
உலகநாயகன் கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலம்ஸ் இன்டர்நேஷனல் விஸ்வரூபம், உத்தமவில்லன், விக்ரம், கடாரம் கொண்டான் ஆகிய சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்தது. தற்போது அமரன், எஸ்டிஆர் 48 படங்களைத் தயாரித்து வருகிறது. இவை தவிர
ஒண்டர்பார், தேனாண்டாள் பிலிம்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய பட நிறுவனங்களும் பல படங்களைத் தயாரித்து வருகிறது.
தேனாண்டாள் நிறுவனம் தில்லுக்கு துட்டு, மெர்சல், கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் மாறன், வீரன், கேப்டன் மில்லர் போன்ற படங்களைத் தயாரித்துள்ளது.
இவற்றில் தனுஷின் சொந்த நிறுவனம் ஒண்டர்பார். வட சென்னை, மாரி 2, வேலையில்லா பட்டதாரி உள்பட பல படங்களைத் தயாரித்தது. மணிரத்னத்தின் நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தற்போது பொன்னியின் செல்வன் எடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து உலகநாயகன் கமலின் நடிப்பில் தக் லைஃப் படத்தைத் தயாரித்து வருகிறது.