Connect with us
Rajni , Sarath

Cinema History

2023ல் டாப் 10 தமிழ்ப்படங்கள் – ரஜினியை ஓரங்கட்டிய சரத்குமார்

2023ம் வருடம் முடிவுக்கு வந்துவிட்ட இந்த வேளையில் இந்த ஆண்டில் பல பெரிய பட்ஜெட் படங்கள் வந்துள்ளன. லியோ, ஜெயிலர் போன்ற படங்கள் வந்து பட்டையைக் கிளப்பியுள்ளளன. ஆனாலும் அவை சிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை. அவை வெறும் பொழுதுபோக்குப் படங்களாகவே வந்துள்ளன. ஆனால் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த படங்கள் வெளிவந்துள்ளன. என்ன என்று பார்க்கலாமா…

போர் தொழில்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த சூப்பர்ஹிட் திரில்லர் படம். திருச்சியில் தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கொலையாளி யார் என்று துப்பறிகிறது காவல்துறை. படத்தில் காட்சிக்குக் காட்சி யூகிக்க முடியாதபடி திரைக்கதை செல்வது வேற லெவல்.

இயக்குனர் விக்னேஷ் ராஜா நுட்பமாக படத்தைக் கொண்டு சென்று வென்று காட்டியுள்ளார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் வந்துள்ளது இந்த போர் தொழில். படத்தில் சரத்குமார் எஸ்.பி.யாகவும், அாக் செல்வன் டிஎஸ்பியாகவும் நடித்துள்ளனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

JDxx

JDxx

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியான படம். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து தரமான படத்தைக் கொடுத்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பட்டையைக் கிளப்பியது. படம் முழுவதும் கலகலப்பாகக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

விடுதலை பார்ட் 1

வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான சூப்பர்ஹிட் படம். விஜய்சேதுபதி, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். பழங்குடியினர் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்கப் போராடும் கதை. விஜய்சேதுபதி அவர்களுக்காகப் போராடுகிறார். கான்ஸ்டபிளாக வரும் சூரி முற்றிலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார். காவல்துறையின் அடக்குமுறையை வெகுநேர்த்தியாகக் காட்டியுள்ளார் இயக்குனர்.

குட் நைட்

குறட்டைப்பிரச்சனையால் அவதிப்படும் கதாநாயகனின் கதை காமெடி கலந்து அட்டகாசமாக எடுத்துள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். மணிகண்டன், மீத்தா ரகுநாத் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். தமிழ்ப்படங்களில் வெறும் ஆக்ஷன் கதைகளையும் தாண்டி வேறு ஜேனரிலும் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துவிட்டார் இயக்குனர். சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமான படம்.

டாடா

குட்நைட் படம் போலவே இதுவும் சின்ன பட்ஜெட் படம் தான். ஆனாலும் கதை அருமை. குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை தன் மகனைக் கவனித்துக் கொள்வது மற்றும் தன்னை எப்படி மீட்கிறார் என்பதே கதை. படத்தின் காட்சிகளை சுவாரசியம் குறையாமல் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு. கவின், அபர்ணா தாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

மாமன்னன்

Mamanan

Mamanan

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு காம்பினேஷனில் வந்து கலக்கிய படம். இவர்களது கூட்டணியில் இதுதான் சிறந்த படம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த எம்எல்ஏ.வான பட்டத்து ஹீரோவின் கதை. சாதி, எதிர்ப்பு, கட்சிக்குள் சாதி அரசியல் என படம் வித்தியாசமாக வந்துள்ளது. பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் நடிப்பில் பட்டையைக் கிளப்பியுள்ளனர்.

இந்தப்படத்தில் வழக்கமான காமெடியனாக இல்லாமல் வடிவேலு சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தின் கதை ஓட்டத்தை அருமையாகக் கொண்டு சென்றுள்ளார்.

மாவீரன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டில் இது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம். மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் கோழை கார்டூனிஸ்டாக வருகிறார். பின்பு எப்படி சூப்பர் ஹீரோவாகிறார் என்பதே கதை.

சித்தா

எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார். பெடோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதே கதை. சித்தார்த் மாறுபட்ட நடிப்பில் அசத்துகிறார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம்.

பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கிய அற்புதமான படைப்பான பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு (2022) வெளியானது. அதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. படத்தின் மூலக்கதையில் இருந்து விலகி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதுவே படத்திற்கு பிளஸ் ஆகி விட்டது. இந்தப்படம் இலக்கிய ஆர்வலர்களுக்கு பிடித்தமான படம்.

கூழாங்கல் 

இது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்ற முதல் தமிழ்ப்படம். பிஎஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். தரமான கதை. மனைவியுடன் சண்டை. பிரிந்து சென்ற அவளைத் தேட பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் தன் மகனையும் உடன் அழைத்துச் சென்று விடுகிறான். முடிவில் குடும்பம் இணைந்ததா என்பதே கதை.

google news
Continue Reading

More in Cinema History

To Top