Cinema History
தமிழில் அதிக வசூல் செய்த டாப் 20 படங்கள்… நீங்க நினைச்சது இருக்கான்னு பாருங்க!.
தமிழ்சினிமா உலகில் நிறைய படங்கள் ரிலீஸாகி வருகிறது. ஆனால் எல்லாமே ஹிட்டாகவில்லை. அதிக வசூல் செய்த 20 படங்கள் என்னென்னு பார்ப்போமா…
2016ல் விஜய், சமந்தா நடித்த தெறி ரிலீஸ். இது பிளாக் பஸ்டர் ஹிட். தமிழ், தெலுங்கில் அதிக வசூல் செய்த படங்களில் இது தான் 2வது இடம். 75 கோடி பட்ஜெட்டில் எடுத்து 160 கோடியை வசூலித்தது.
விஸ்வரூபம் 2013ல் வெளியானது. கமல், ஆண்ட்ரியா, பூஜா உள்பட பலர் நடித்துள்ளனர். கமலின் சொந்தப்படம். தமிழில் மிகப்பெரிய வெற்றி. 220 கோடியை வசூலித்தது.
2023ல் எச்.வினோத் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அஜீத்தின் துணிவு ரிலீஸ். 120 கோடி பட்ஜெட், வசூலோ 260 கோடிக்கும் மேல. தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2019ல் வந்த படம் விஸ்வாசம். 100 கோடி பட்ஜெட், வசூல் 224 கோடி.
தல அஜீத் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 2022ல் வெளியானது வலிமை. ஜோடியாக ஹீமா குரோஷி நடித்தார். கலவையான விமர்சனங்கள் தான். ஆனாலம் 150 கோடி பட்ஜெட், 234 கோடிக்கும் மேல வசூல்.
2019ல் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படம். விஜய் சேதுபதி வில்லன். சிம்ரன், திரிஷா, சசிக்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 160 கோடி பட்ஜெட், வசூல் 260 கோடி. விஸ்வாசத்தை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.
2022ல் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியான படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே தான் ஜோடி. அனிருத் இசை அமைத்துள்ளார். 150 கோடி பட்ஜெட், வசூல் 250 கோடி. கேஜிஎப்.புடன் மோதியது.
ஷங்கர் இயக்கத்தில் 2015ல் விக்ரம் நடித்த படம் ஐ. எமிஜாக்சன் ஜோடி. 140 கோடி பட்ஜெட். வசூல் 240 கோடி. ரஜினியின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்க 2020ல் வெளியான படம் அண்ணாத்த. 240 கோடிக்கும் மேல வசூல்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2018ல் வெளியான படம் சர்க்கார். இதற்கு முன் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, துப்பாக்கி படங்களில் விஜய் நடித்து இருந்தார். 110 கோடி பட்ஜெட். 260 கோடி வசூல்.
2020ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் தர்பார். ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் நடித்துள்ளனர். 240 கோடி பட்ஜெட். ஆனால் பிளாப். 250 கோடி தான் வசூல். 2017 விஜய் நடிக்க அட்லீ இயக்கிய படம். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளனர். 120 கோடி பட்ஜெட். 260 கோடிக்கும் மேல் வசூல்.
2021ல் விஜய் நடிக்க லோகேஷ் இயக்கிய படம் மாஸ்டர். விஜய் சேதுபதி தான் வில்லன். இது கொரோனா காலத்தில் வெளியானது. அனிருத் இசை அமைத்துள்ளார். 135 கோடி பட்ஜெட், வசூல் 300 கோடிக்கும் மேல.
2010ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க வந்த படம் எந்திரன். ஐஸ்வர்யா ராய் தான் ஜோடி. 150 கோடி பட்ஜெட். 300 கோடிக்கும் மேல வசூல். 2016ல் பா.ரஞ்சித் இயக்க, ரஜினி நடித்த படம் கபாலி. ராதிகா ஆப்தே தான் ஜோடி. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். 300 கோடிக்கும் மேல வசூல்.
2023ல் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த படம் வாரிசு. துணிவுடன் மோதியதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 200 கோடி பட்ஜெட். 310 கோடி வசூல் சாதனை. 2019 அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் பிகில். நயன்தாரா ஜோடி. அட்லீ 3வது முறையாக விஜயுடன் இணைந்தார். இந்தப் படம் அட்லீயின் முந்தைய படங்களை விட மாஸ் வெற்றி. 180 கோடி பட்ஜெட். 328 கோடி வசூல்.
2022ல் கமல் நடிக்க, லோகேஷ் இயக்கி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் விக்ரம். கமல் உடன் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் நடித்துள்ளனர். 150 கோடி பட்ஜெட். வசூல் 450 கோடி.
மணிரத்னம் இயக்கத்தில் 2022ல் வெளியான படம் பொன்னியின் செல்வன் 1. விக்ரம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதுவரை அதிக வசூல் செய்த 2வது தமிழ்ப்படம் இதுதான். வசூல் 500 கோடி.
ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கிய படம் 2.O. இது எந்திரன் படத்தின் 2ம் பாகம். உலகம் முழுவதும் 800 கோடியை வசூல் செய்து முதலிடத்தைப் பிடித்தது.