கோலிவுட்டில் பெற்றோரை மிஞ்சிய பிள்ளைகள்! நம்ம பிள்ளைதானா என ஆச்சரியப்பட வைத்த சூர்யா

Father vs Son Role: தமிழ் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாகவே வர ஆரம்பித்து விட்டன. வாரிசுகளை தாண்டியும் கொல்லு பேரன் பேத்தி என மூன்றாம் தலைமுறையினரின் ஆதிக்கமும் தோன்ற ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் சினிமாவில் தான் சாதிக்கவில்லை என்றாலும் தன் மகளோ மகனோ சாதித்து விட்டான் என்று பெருமைப்பட வைத்த ஹீரோக்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

சிவக்குமார் - சூர்யா: 70, 80களில் ஒரு முதன்மை கதாநாயகனாக வலம் வந்தவர்தான் சிவக்குமார். சிவாஜி காலகட்டத்தில் ஒரு இரண்டாம் தர நடிகராகத்தான் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினி, கமல் இருந்த காலகட்டத்திலும் அவர்கள்க்கு இணையாக இவரால் டஃப் கொடுக்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு அப்பா கதாபாத்திரத்தில் விஜய், அஜித் இவர்களுக்கு நடித்தார். ஆனால் இவரின் மகனான சூர்யா இன்று தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார்.

இதையும் படிங்க: விஜய் டூ சந்தானம்… ஜி.வி. டூ துல்கர்… இந்த வார ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் சூப்பர் ஹிட் படங்கள்..!

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்: இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கே பெருமைமிக்க நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய். சினிமாவையும் தாண்டி அரசியலிலும் அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார். இவருடைய அப்பா சந்திரசேகர் ஒரு திறமிக்க இயக்குனராக இருந்தாலும் விஜய்க்கு இருக்கிற அந்த மாஸ் அப்போது சந்திரசேகருக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி படங்களை எடுத்து வந்தார்.

சிம்பு - டி.ராஜேந்திரன்: புலிக்கு பிறந்ததது பூனையாகுமா? என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடு 8 அடி பாய்ஞ்சால் குட்டி 16 அடி பாய்கிறது. அப்படியே ராஜேந்திரனுக்கு உரிய அனைத்து திறமைகளும் வாய்க்கப் பெற்றவராக சிம்பு திகழ்கிறார். பன்முகத்திறமையுள்ள நடிகராக வலம் வரும் சிம்புவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் இன்னும் சிறப்பான இடத்தை நோக்கிப் போக வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: உன்ன எவ்ளோ நேரம் பாத்தாலும் சலிக்காது!.. சைனிங் அழகை காட்டி மயக்கும் சிருஷ்டி டாங்கே!.

சுஹாசினி - சாருஹாசன்: 80களில் முன்னனி நடிகையாக இருந்தவர் சுஹாசினி. நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராக ஒளிப்பதிவாளராக என பன்முகத்திறமைசாலியாகவே இருந்தார். ஆனால் அவருடைய அப்பாவான சாருஹாசன் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து அப்படியே சினிமாவில் இருந்து ஓய்வும் பெற்றார்.

 

Related Articles

Next Story