Connect with us
பிரபலங்கள்

Cinema News

அந்த பழக்கத்தால் அசிங்கப்பட்ட பிரபலங்கள்… இப்படியா பண்ணுவீங்க..

பெரும்பாலான இந்திய பிரபலங்கள் நிறைய பழக்கங்களை பின்பற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் விநோதமான பழக்கங்கள் அதிகமாக பேசப்படும். அதுமட்டுமல்லாது அவர்களின் உணவுமுறையுமே பரவலாக பேசப்படும். அப்படி, டயட்டால் உடலெடையில் அவர்கள் செய்த மாற்றம் சில சமயம் வைரலாக பரவும்.

சிலம்பரசன்:

கோலிவுட்டின் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான போது இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள். ஒல்லியான தேகமே இவரின் அழகுக்கு கூடுதல் ப்ளஸ். ஆனால்,சிம்புவின் வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகள் அவர் வாழ்க்கை முறையை மாற்றியதாம். நடனம் ஆடாமல் தொடர்ந்து, தூக்கம், எல்லா நேரமும் பிரியாணி, ட்ரிங் என காலத்தை ஓட்டினார். இதனால் இவருக்கு 105 கிலோ எடை கூடியது. சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் அதே உடலமைப்பில் நடித்தார்.

சிலம்பரசன்

அது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இதனால் சிம்பு தனது தேவையில்லாத பழக்கத்தை விட்டாராம். கார்டியோ உடற்பயிற்சி, சுத்த சைவ டயட்டுகள் என வலம் வந்தார். ஆனால், சரியான ப்ரோட்டீன்களை எடுக்கவில்லையாம். அதுமில்லாமல்,தொடர்ந்து கடினமான உடற்பயிற்சி செய்ததில் சிம்புவிற்கு மசில் லாஸும் ஏற்பட்டது. இது உடல் எடை குறைந்தவர்களை சோர்வானவர்களாக மாற்றும். வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு சமயத்தில் அவர் செல்பி ஒன்று வைரலானது. அதில் ஒல்லியாக இருந்தாலும் ஒரு லுக்கை அவருக்கு கொடுக்கவில்லையாம். இதை கருத்தில் கொண்டு சிம்பு இனி பழைய மசில் கொண்டு வர உடற்பயிற்சியில் இறங்கிவிட்டதாக தெரிகிறது.

கீர்த்தி சுரேஷ்:

சிவகார்த்திகேயனின் நாயகியாக சினிமாத்துறைக்குள் வந்தவர். கொழுகொழுவென இருக்கும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். படத்தில் எல்லாம் எடை குறைப்பு தெரியாமல் இருந்தது. ஒரு விளம்பரத்தில் அம்மணி ஒல்லியாக நடித்து வெளியாகியது. இது பலருக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது. ஏனெனில், அவருக்கென தனி சிறப்பே கொழு கொழு கன்னம் தான். அதை குறைத்து கம்பு போல இருந்தார். ஏன்மா இப்படி எனக் கேட்டதற்கு மிஸ் இந்தியா படத்திற்காக எனக் கூறினார். ஆனால்,அவர் உடல் எடை விமர்சிக்கப்பட்டதே இதற்கு காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இவரும் சிம்பு செய்த மாதிரி தான். அதீத உடற்பயிற்சி குறைவான ப்ரோட்டீன் மாவு சத்து இல்லாத உணவு எடுத்துக்கொண்டார். இது அவரின் முக அழகையே கெடுத்தது.

நயன்தாரா:

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது உடல் எடை குறைப்பில் வித்தியாச முறையை கையாண்டு இருக்கிறார். நான் இருக்கும் பிஸிக்கு இந்த டயட், உடற்பயிற்சிலாம் செய்ய முடியாது என யோசித்தாராம். இதனால் மருத்துவரிடம் சென்று லிப்போ சக்‌ஷன் சர்ஜரியை செய்துக்கொண்டு இருக்கிறார். அது அவரிடம் உள்ள தேவைக்கு அதிகமான கொழுப்பை குறைத்து விடுமாம். ஐயாவில் அழகு பதுமையாக இருந்தவர். நானும் ரவுடி தான் படத்தில் ஜீரோ சைசில் ஆச்சரியப்படுத்தினார். இருந்தும் நாட்கள் ஆக நயனின் முக வசீகர இழந்து வருகிறதாம். இதனால் மீண்டும் உடலை தேற்றுங்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தை மறைக்காத நயன்தாரா.. குழப்பத்தில் திரையுலகம்.! இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ.?!

டாப் ஸ்டாராக இருந்தவர் பிரசாந்த். ஒரு காலத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஏன்? தல அஜித்தை விடுத்து இவரை கூட்டம் மொய்த்த காலங்களும் உண்டு. அப்போதே உடலை சரியாக வைத்துக்கொண்டவர். ஆனால் மம்முட்டியான் என்ற படத்திற்காக அவர் ஏற்றிய 20 கிலோ தான் மிகப்பெரிய தவறாக அமைந்தது. உடல் எடையை ஈசியாக ஏற்றிவிடலாம். ஆனால், குறைப்பது தான் சிரமமே. அப்படி அவர் ஏற்றிய உடலை குறைக்க முடியவில்லையாம். தொடர்ந்து, ஜிம்மில் கிடந்தாலும், போன போகுது என சில கிலோக்கள் குறைந்தாலும் பழைய வடிவம் வரவில்லையாம். இது அவரின் மார்க்கெட் தான் பதம் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பூ:

தமிழ் சினிமாவில் குண்டாக இருந்தாலும் மார்க்கெட்டை பிடிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர். அமுல் பேபியாக இருந்தவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது. பீக் மார்க்கெட்டை பல ஆண்டுகள் தக்க வைத்து வருகிறார். இந்நிலையில் தான் குஷ்பூ தனது 20 கிலோ உடல் எடையை குறைத்து அனைவருக்கும் ஸ்வீட் ஷாக் கொடுத்தார். இது அவருக்கு உடல் ஆரோக்கியம் தான். ஆனால்,அவரின் பழைய வசீகரம் இழந்தது மட்டுமல்லாமல் உடலில் பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்து இருப்பதாக தெரிகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top