சினிமா கைவிட்டாலும் என் பொண்டாட்டி கைவிடமாட்டா! கோடீஸ்வர வீட்டு மருமகனாக மாறிய பிரபல நடிகர்கள்

by Rohini |
ajith
X

ajith

சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் நடிகர்கள் பலர் கோடீஸ்வரர் வீட்டு மருமகனாகத்தான் இருக்கிறார்கள். ஒருவேளை சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தன் மனைவியின் சொத்தை வைத்தாவது அவர்கள் தன் வாழ்க்கையை ஓட்டி விடுவார்கள். அப்படி கோடீஸ்வரர் வீட்டு மருமகனாக இருக்கும் அந்த நடிகர்களை பற்றி தான் இந்த லிஸ்டில் பார்க்க இருக்கிறோம்.

துல்கர் சல்மான் : மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் வாரிசு தான் துல்கர் சல்மான். ஆரம்பத்தில் துல்கர் சல்மானுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு தான் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருடைய மனைவி அமர் சோபியா. சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு நார்த் இந்தியன் பெண் தான் இந்த அமர் சோபியா. இவர் ஒரு ஆர்க்கிடெக்ட்டாம். சொந்தமாக பிசினஸ் செய்து வரும் இவர் மாதம் ஒரு கோடி வரை சம்பாதிக்கிறாராம். அவருடைய தந்தையும் பெரிய கோடீஸ்வராம். துல்கர் சல்மானே ஒரு படத்திற்கு ஒரு கோடி வாங்குவாரா என்பது சந்தேகம்தான்.

ஆர்யா : தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆர்யா திடீரென இப்படி ஒரு தனக்கு வயதில் மிகவும் குறைவான வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொண்டாரே என்ற ஒரு வியப்பு அனைவருக்கும் இருந்தது. இருந்தாலும் சாய்ஷாவின் குடும்பப் பின்னணியை பார்க்கும்போது ஒரு வேளை அதற்காக கூட இருக்கலாம் என்றுதான் யோசிக்க வைத்தது. பெரிய பணக்கார வீட்டு குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் சாயிஷா. பாலிவுட்டில் பழம்பெரும் நடிகரான திலீப் குமார். இவருடைய பேத்தி முறைதானாம் சாயிஷா.

விக்ரம் பிரபு: விக்ரம் பிரபுவின் மனைவி லக்ஷ்மி. நாமக்கலில் ஒரு பெரிய பணக்கார வீட்டு பெண்மணியாக இருந்தவர். இவருடைய தந்தை மதிவாணன். ஒரு பெரிய பிசினஸ் .டெக்ஸ்டைலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியவராம் மதிவாணன். அதுமட்டுமில்லாமல் நாமக்கலில் பெரிய பெரிய கல்லூரிகளை நிறுவி அதை நிர்வகித்தும் வருகிறாராம்.

விஷ்ணு விஷால்: விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். பிரபல சினிமா தயாரிப்பாளரான நடராஜன் அவரின் மகளான ரஜினியை முதன் முதலில் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு பிரபல ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை யான ஜுவாலா குட்டா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஜுவாலா குட்டா ஏராளமான போட்டிகளில் கலந்துகொண்டு சேம்பியன் என பல விருதுகளையும் தங்கப் பதக்கங்களையும் வென்றவராம். இவரும் செல்வ செழிப்பிலேயே இருந்து வந்தவர் தானாம்.

செல்வராகவன்: முதலில் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் அவரை பிரிந்து இரண்டாவதாக கீதாஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கீதாஞ்சலி செல்வராகவனின் மயக்கம் என்ன என்ற திரைப்படத்தில் உதவியாளராக இருந்தவர் என சொல்லப்பட்டது. அதன் மூலம் வளர்ந்த காதல்தான் திருமணத்தில் இவர்களை சேர்த்தது என்றும் செய்திகள் வந்தன. இருந்தாலும் கீதாஞ்சலி குடும்பப் பின்னணியை பார்க்கும் போது அட்வகேட் ஜெனரல் ஆப் தமிழ்நாடு என்ற பதவியில் இருந்த அவருடைய அப்பா, தாத்தா என பெரிய பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். கீதாஞ்சலியின் சித்தப்பா நடிகர் மோகன்ராம் இவரும் ஒரு பிரபல நடிகர்.

Next Story