Directors: தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனர்களாக இருந்து புகழ் அடைந்த திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்த ஆச்சரிய பட்டியல் குறித்த தொகுப்புகள் இது.
இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் புகழப்படுபவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டராக கொடிகட்டி பறந்து வந்த சமயத்தில் இவருக்கு ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்பு வந்தது. நடிப்பு, டான்ஸ் என அசத்தி வந்தவர் 2005 ஆண்டு தெலுங்கில் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
பின் 2007ல் தளபதி விஜயை வைத்து தமிழில் போக்கிரி படத்தினை இயக்கினார். அப்படம் சூப்பர்டூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் வில்லு,வெடி உட்பட பல மொழிகளில் 15 படம் இயக்கியுள்ளார். ஆனால் போக்கிரி கொடுத்த அந்த ஹிட்டை மற்ற படங்களால் கொடுக்க முடியவில்லை.
1994ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் குடும்பமே டான்ஸ் மாஸ்டர்கள் என்பதால் இவரும் நடன இயக்குனராக தொடர்ந்தார். அழகிய தமிழ் மகன், வேலாயுதம் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டரும் இவர்தான். ஆனால் 2022ல் “ஹே சினாமிகா” படத்தினை இயக்கினார். துல்கர் சல்மான், அதிதி ராவ் என்ற ஹிட் கூட்டணி என்றாலும் படம் படு தோல்வி.

பிரபுதேவாவின் அண்ணனாக அறியப்பட்டாலும் அவருக்கு முன்னாலே நடன இயக்குனராக வந்தவர் ராஜி சுந்தரம். ஹிட் மாஸ்டராக இருந்தாலும் இவருக்கு 2008 ஆண்டு அஜித் மற்றும் நயன்தாராவை வைத்து ஏகன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வி அடைந்தது. இவர் இயக்கிய ஒரே படமும் இதுதான்.
தனியாக அடையாளம் இல்லாமல் அறிமுகமாகி டான்ஸ் மாஸ்டராக ஹிட் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் மாஸ் காட்டினார். முனி, காஞ்சனா உட்பட தமிழ் மற்றும் தெலுங்கில் இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார். எல்லாமே நல்ல வசூல் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராக மாறியவர் சதீஷ். இவர் கோலிவுட்டில் தற்போது நடன இயக்குனராக இருக்கும் நிலையில் தற்போது கவின் நடிப்பில் உருவாகி வரும் கிஸ் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.