விஜயிடம் மீண்டும் மண்ணை கவ்விய அஜித்குமார்… ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிதான்!

by Akhilan |   ( Updated:2025-04-07 04:17:33  )
விஜயிடம் மீண்டும் மண்ணை கவ்விய அஜித்குமார்… ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிதான்!
X

Vijay vs Ajith: தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜய் இடையே நடக்கும் போட்டி பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் சமீபத்திய ஆண்டுகளாக இதில் விஜயை முன்னணி வகித்து வருவது குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு தலைமுறைகளிலும் இரண்டு நடிகர்கள் முன்னிலை வகித்து வருவார்கள். இவர்களை விட இவர்களின் ரசிகர்கள் தான் இவர்களுக்காக மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல் என இந்த சண்டை நீண்டு கொண்டு தான் இருக்கிறது.

இதில் உச்சம் பெற்றது என்னவோ நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரின் ரசிகர் போட்ட சண்டைதான். ஒவ்வொரு முறையும் இருதரப்பும் மாற்றி மாற்றி தங்களுடைய ரெக்கார்ட்களை வைத்து அடித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் இருவரும் மாற்றி மாற்றி முன்னிலையில் இருப்பார்கள்.

ஆனால் இதில் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் தன்னுடைய படங்கள் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ட்ரெய்லர் தொடங்கி பாடல்கள் முதல் படத்தில் வசூல் வரை எட்ட முடியாத இடத்தில் தன்னுடைய ரெக்கார்டை வைத்துக்கொண்டு வருவதால் போட்டி பெரிதாகவே இல்லை.

இதுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். ஒரு படத்திற்கு பல மாதங்கள் எடுத்துக் கொண்டதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இருந்து தான் அவரின் படங்கள் மற்றும் அதன் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் ப்ரீ புக்கிங் வசூல் நிலவரம் குறித்த டாப் 5 அப்டேட்கள் கசிந்து இருக்கிறது. இதில் முதல் படத்தில் விஜயின் லியோ படம் இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன் டிக்கெட் புக்கிங் 8 லட்சத்து 98 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 3 லட்சத்து 44 ஆயிரம் எனவும், மூன்றாம் இடத்தில் விஜயின் கோட் படம் 3 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட் புக்கிங்குடன், நான்காம் இடத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி ஒரு லட்சத்து 83 ஆயிரம் டிக்கெட் புக்கிங்குடன் இருக்கிறது.

ஐந்தாம் இடமும் அஜித்தின் விடாமுயற்சிக்கு தான். ஒரு லட்சத்து 66 ஆயிரம் டிக்கெட் புக்கிங்குடன் இருக்கிறது. விஜயின் ரெக்கார்டை இன்றுக்குள் கண்டிப்பாக நெருங்கவே முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story