கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த 5 திரைப்படங்கள்.. அஜித்துக்கு கிடைச்ச லக் விஜய்க்கு இல்லையே!..

by Rohini |   ( Updated:2024-02-18 07:49:38  )
ravi
X

ravi

KS Ravikumar: தமிழ் சினிமாவில் பெரிய ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி, கமல் , விஜய், அஜித் இவர்களுக்கெல்லாம் அவர்களின் கெரியரில் மிக முக்கிய படங்களை கொடுத்த பெருமை ரவிக்குமாரை சேரும். இவரின் இயக்கத்தில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. ரஜினியின் சமீபகால படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ரவிக்குமாரை கண்டிப்பாக பார்க்க முடியும்.

அந்தளவுக்கு ரஜினியின் வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர் ரவிக்குமார். இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்ற படங்களைத்தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படிங்க: முதல் ஹீரோ படம்… ஆனாலும் டைட்டிலில் பெயரை விட்டுக் கொடுத்த ரஜினி… அட பெரிய மனசுதான்!..

நாட்டாமை: கிராமத்தில் நடக்கும் எந்தவொரு பஞ்சாயத்தாக இருந்தாலும் முதலில் ஒலிக்கும் குரல் நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு என்பதுதான். அந்த டையலாக்கை மிகப்பெரிய அளவில் கொண்டு செலுத்திய பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. சரத்குமார் , குஷ்பூ, மீனா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வெளியான இந்தப் படம் ஓஹோவென ஓடியது. டிவியில் இப்பொழுது போட்டாலும் ஓடி வந்து பார்க்க கூடிய ரசிகர்களை பார்க்க முடிகிறது.

முத்து: ரஜினியின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் முத்து. சொல்லப்போனால் இந்தப் படத்திற்கு பிறகு ரஜினியை பெரிய அளவில் கொண்டாட ஆரம்பித்தார்கள். மிகவும் எதார்த்தமாகவும் கடைசியில் ரசிகர்களை அழ வைக்கும் அளவுக்கு ரஜினியின் நடிப்பு உச்சத்தை எட்டியது. படம் வெளியாகி ஜப்பான் வரை பேர் சொல்ல வைத்தது. அந்தளவுக்கு ரஜினியின் மாஸை உயர்த்தி காட்டிய படம்தான் முத்து.

இதையும் படிங்க: இளையராஜாவின் மெட்டில் பிறந்த யுவனின் பாடல்… அப்போ 80ஸ்க்கு… இப்போ 2கே கிட்ஸ்க்கு… இதெப்படி இருக்கு?

படையப்பா: ரஜினிக்கு பேர் வாங்கிக் கொடுத்ததோ இல்லையோ ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு கம்பேக் கொடுத்த படமாக படையப்பா படம் அமைந்தது. நீலாம்பரியாக இன்றளவும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். கதையையும் விட படத்தில் அமைந்த பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். சிவாஜியுடன் ரஜினியின் நடிப்பு ஒரு வித உணர்வை ஏற்படுத்தியது. அப்பா மகனாக இருவரும் பின்னியிருப்பார்கள். இந்த படமும் வசூலில் சாதனை படைத்தது.

வரலாறு: அஜித் மூன்று வேடங்களில் நடித்த படம் வரலாறு. அதுவும் திரு நங்கை சாயலில் அஜித் முதன் முதலில் நடித்த படமாகவும் அமைந்தது. அஜித்தா இப்படி நடித்தது? என்ற அளவுக்கு ரவிக்குமார் அஜித்தை நடிக்க வைத்திருப்பார். அஜித்தின் கெரியரில் மிக முக்கியமான படமாகவும் வரலாறு படம் அமைந்தது. இதுவும் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற படமாக அமைந்தது.

இதையும் படிங்க: வில்லனாக நடித்த நடிகர் திலகத்தை அலார்ட் ஆக்கிய ரசிகர்கள்… நடந்தது இதுதான்!..

தசாவதாரம்: கமல் 10 வேடங்களில் நடித்து கலக்கிய திரைப்படம் தசாவதாரம். மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய படமாக இந்தப் படம் அமைந்தது. ஏனெனில் இதற்கு முன் 9 வேடங்களில் நவராத்திரி படம் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்தது. அதன் பிறகு 10 வேடம் என கமல்தான் நடித்திருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெற்ற படமாக ரவிக்குமாருக்கு அமைந்தது.

Next Story