More
Categories: Cinema History

2021ன் சிறந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

தமிழ்ப்படங்களில் எப்போதும் பரபரப்பாக செல்லும் திரைக்கதையைக் கொண்ட படங்களுக்குத் தனி மவுசு தான். அந்த வகையில் இந்த வருடமும் விதிவிலக்கல்ல. பரபரவென படம் பார்ப்பதே தெரியாமல் கதைக்களத்துடன் நாம் ஒன்றி விடுவோம். அந்தவகையில் இந்த ஆண்டு வெளியான டாப் 5 படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

மாஸ்டர்

Advertising
Advertising

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாஸ்டர். பரபரப்பான திரைக்கதையுடன் வெளியான இப்படத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். அவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

அனிருத் ரவிச்சந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட் ஆயின. வாத்தி கம்மிங், அந்த கண்ண பாத்தாக்க, குட்டி ஸ்டோரி, குயட் பண்ணுடா, பொளக்கட்டும் பற பற, போனா போகட்டும், வாத்தி ரெய்டு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மாநாடு

Manaadu poster

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான அதிரடி திரைப்படம். வித்தியாசமான திரைக்கதைக்களத்துடன் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும் சிம்புவை விட எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு சூப்பர் என்கின்றனர். அவரது வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு….என்ற டயலாக் ட்ரெண்ட்டானது.

படத்தில் இவர்களுடன் கல்யாணி, பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர். மெஹெரெஸிலா, வாய்ஸ் ஆஃப் யூனிட்டி, நெருப்பில் ஒரு நடை, என்னைப் பின்பற்று ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப்படத்தில் டைம் லூப் முறையைப் பின்பற்றி வித்தியாசமான திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். இதற்கு முன் இதே முறையில் வெளியான படம் ஜாங்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன்

Karnan Dhanush

மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான பரபரப்பான திரைக்கதை அம்சம் கொண்ட படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தனுஷ், ரஜிஷா விஜயன், லால், நடராஜன், சுப்பிரமணியம், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

கண்டா வரச்சொல்லுங்க, கர்ணன் கொடை, மஞ்சனத்தி புராணம், தட்டான் தட்டான், உட்றாதீங்க யப்போ ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் காவல் நிலையத்தில் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சியை யதார்த்தமாக படம்பிடித்துள்ளனர். இந்தக்கதையானது 1995ல் தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளத்தில் நடந்த சாதிக்கலவரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

டாக்டர்

doctor sivakarthikeyan

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் டாக்டர். பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, இளவரசு ஆகியோர் நடித்துள்ளார். அனிருத் ரவிச்சத்திரன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் செம ஹிட். இப்படம் நெட்பிளிக்ஸ்ஸில் வெளியானது. சோ பேபி, செல்லம்மா, நெஞ்சமே உள்பட பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சார்பட்டா பரம்பரை

sarpatta parambarai

இந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்கள் பெரிதும் ரசித்த படங்களில் இதுவும் ஒன்று. இந்தப்படத்தின் கதையானது 1960ம் ஆண்டுக்கான கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இடியப்ப மற்றும் சார்பட்டா என்ற இரு பரம்பரைகளுக்கு இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் கதை.

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த இப்படத்தை சண்முகம் தட்சன்ராஜ் தயாரித்துள்ளார். ஆர்யா, ஜான் கோக்கன், ஜான் விஜய், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ஆர்யா வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் பாடி பில்டராக நடித்து அசத்தியிருப்பார். வம்புல தும்புல, நீயே ஒளி உள்பட பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Published by
sankaran v

Recent Posts