ரஜினிகாந்திற்காக இரண்டு நாயகர்களை வில்லனாக்கிய ஏ.வி.எம்... யார் அந்த டாப் ஹீரோக்கள் தெரியுமா?

by Akhilan |   ( Updated:2022-10-14 11:47:58  )
ரஜினிகாந்த்
X

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக ஏ.வி.எம் ரஜினிகாந்த் படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்திற்கு அப்போது முன்னணியில் இருந்த நாயகர்களை நடிக்க வைத்திருக்கிறது.

பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏ.வி.எம் நிறுவனம். மீண்டும் வந்தபோது இயக்கி படங்களில் தான் ஒரு புது யுத்தியை கையாண்டது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருந்த படம் முரட்டுக்காளை. இப்படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைக்க யோசனை கூறியவர் பஞ்சு அருணாச்சலம்தான். இருப்பினும் அதை ஜெய்சங்கரிடம் நேராகத் தெரிவிப்பதில் அவருக்குத் தயக்கம் இருந்தது. நாயகனாக இருக்கும் என்னை வில்லனாக நடிக்க சொல்கிறாயா எனக் கேட்டுவிட்டால் என்ன செய்வது என தயக்கம்.

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

ஏவி.எம்.சரவணனிடம் இந்த ஐடியாவை அவர் கூறினார். நல்லா தான் இருக்கும் அவரிடமே பேசிவிடலாமே என்றாராம். ஜெய்சங்கரை அழைத்து இந்த யோசனையை சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன அடுத்த நிமிடமே, நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார் ஜெய்சங்கர். இது அங்கிருந்த சரவணன், பஞ்சு என அனைவருக்குமே ஆச்சரியம். யோசிக்காம சொல்லுறீங்களே எனக் கேட்டார்கள். இதில் யோசிக்க என்ன இருக்கிறது. என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர்கள். அதனால்தான் யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன் என்றாராம்.

இதையும் படிங்க: சினிமாவையே பொரட்டி எடுத்த பிரபல வில்லன் நடிகர்…! இப்படி பொசுக்குனு கால்-ல விழ வைச்சுட்டாரே ரஜினி…?

இவரை மட்டுமல்லாமல், முத்துராமனையும் வில்லனாக ரஜினிக்கு களமிறக்க எண்ணினர் சரவணனும்,பஞ்சு அருணாச்சலமும். உடனே, முத்துராமனை காண கிளம்பினார் பஞ்சு. அவரிடம் ‘போக்கிரி ராஜா’ என்ற பெயரில் ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஏ.வி.எம் இயக்கும் இப்படத்தில் நீங்கள் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றாராம் பஞ்சு அருணாச்சலம்.

முத்துராமன்

முத்துராமன்

ஜெய்சங்கர் போல உடனே முத்துராமனால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. இதனால் சில நிமிடம் அமைதியாக இருந்தார். பின்னர், பஞ்சு, இப்போ வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இருக்கிறேன். பல படங்களில் நாயகனாக நடித்துவிட்டேன். கடைசி சூழலில் வில்லனாக நடித்து அடி வாங்கணுமா தான் யோசிக்கிறேன் என்றாராம்.

நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க. இது உங்களுக்கு சினிமாவில் இரண்டாவது சுற்றினை உருவாக்கும். எனக்காக நடியுங்கள் என்றாராம். முத்துராமனும் அறை மனதுடன் சம்மதித்திருக்கிறார். படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால், துரதிஷ்டவசமாக ஒரு படப்பிடிப்பிற்கு சென்ற முத்துராமன் இறந்து விட்டார். இப்படி ரஜினிகாந்திற்கு வில்லனை தேர்வு செய்வதே அப்போது பெரும்பாடாக இருந்திருக்கிறது.

Next Story