ட்விட்டர் மட்டும் தான் நேரில் வரமுடியாது... பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்த முன்னணி நடிகர்

by Akhilan |   ( Updated:2022-09-22 09:45:47  )
ட்விட்டர் மட்டும் தான் நேரில் வரமுடியாது... பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்த முன்னணி நடிகர்
X

பொன்னியின் செல்வன் தற்போதைய கோலிவுட் டவுன் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை கொண்டு உருவாக இருக்கும் இப்படம் செப்டம்பர் மாதம் 30ந் தேதி திரைக்கு வருகிறது.

மணிரத்னம் இப்படத்தை இயக்கி இருக்கிறார். முதல் மற்றும் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது. இப்போதிருந்தே, இப்படத்தினை காண ரசிகர்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம். குந்தவை பிராட்டியாராக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன்

இப்படம் வரும் 30ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் திரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் நடித்த பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் ஹேண்டில்களில் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றி ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை படிங்க: போஸ்டரில் கோட்டை விட்ட மணிரத்னம்… இணையத்தில் வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்..

பொன்னியின் செல்வன்

இதுகுறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது, விக்ரம் தனது கோப்ரா படத்தை பெரிதாக நம்பி இருக்கிறார். அப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் செம ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். ஆனால் அப்படம் சரியாக செல்லவில்லை. நல்ல வசூலும் கிடைக்கவில்லை. இதனால் விக்ரம் செம அப்செட்டில் இருக்கிறார். பொன்னியின் செல்வன் ப்ரஸ்மீட்டில் இதுகுறித்து எதுவும் கேட்கப்பட்டு விடும் என்பதாலேயே தமிழ்நாட்டு ப்ரஸ்மீட்களை தவிர்த்து விட்டாராம்.

Next Story