ஜனங்களின் கலைஞனான விவேக், பல சமூக விழிப்புணர்வு கருத்துக்களை தனது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களுக்கு ஊட்டியவர். தமிழின் டாப் நடிகர்கள் பலருடனும் நடித்த விவேக், தனது சேவை மனப்பான்மையால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராவிதமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்.
சமூக சேவை
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை தன்னுடைய முன்னோடியாக கொண்ட விவேக், “கிரீன் கலாம்” என்ற திட்டத்தின் பெயரில் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக பல விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார் விவேக்.
கே.பாலச்சந்தர்
1987 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய “மனதில் உறுதி வேண்டும்” என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலில் அறிமுகமானார் விவேக். அதன் பின் “புது புது அர்த்தங்கள்”, “ஒரு வீடு இரு வாசல்” போன்ற பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்களில் நடித்தார்.
ஜனங்களின் கலைஞன்
இத்திரைப்படங்களை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த விவேக். முன்னணி நகைச்சுவை கலைஞராக வளர்ந்தார். மேலும் தனது நகைச்சுவையின் மூலம் மக்களுக்கு சமூக விழிப்புணர்வு கருத்துக்களை தெளித்து மக்களின் கலைஞனாக உருவானார்.
கதாசிரியரான விவேக்
கடந்த 2001 ஆம் ஆண்டு விவேக், ராம்கி, ரோஜா, விந்தியா, கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “விஸ்வநாதன் ராமமூர்த்தி”. இத்திரைப்படத்தை ராம நாராயணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கோவை சரளா-விவேக் ஆகியோர் இணைந்து கலக்கிய காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை.
இதில் கோவை சரளா, மனநலம் பாதிக்கப்பட்ட நபராக நடித்திருந்தார். தன்னை ஆண்டாளாகவே நினைத்துக்கொள்ளும் கோவை சரளா, விவேக்கை பெருமாள் என நினைத்து ஒருதலையாக காதலித்து வருவார். இதில் விவேக் கதாசிரியராக நடித்திருந்தார்.
விவேக்கை ஒதுக்கிய டாப் நடிகர்கள்
இத்திரைப்படத்தில் விவேக் கதாசிரியராக நடித்திருந்ததால், ராம நாராயணன், விவேக் ஒரு பெரிய நடிகரிடம் கதை சொல்வது போல் ஒரு காட்சியை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம். இதனை விவேக்கிடம் கூற அவரும் சரி என ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: “இடத்தை காலிபண்ணுங்க”… பிரபல இயக்குனரிடமே சத்தம் போட்டு கத்திய அறிமுக நடிகர்…
இதனை தொடர்ந்து விவேக் அப்போதுள்ள இரண்டு டாப் நடிகர்களிடம் சென்று அந்த காட்சியை விவரித்தாராம். ஆனால் அதில் ஒரு நடிகர் தன்னுடைய வீட்டில் கேட்க வேண்டும் என கூறி மறுத்துவிட்டாராம். மற்றொருவர் “நான் இப்போ இருக்குற மார்க்கெட் ரேஞ்சுக்கு இன்னொருவர் திரைப்படத்தில் உங்களோடு வந்து நடித்தால், என்னுடைய மார்க்கெட் ரேஞ்சுக்கு பங்கம் வரும்” என கூறி அவரும் மறுத்துவிட்டாராம். அதன் பிறகுதான் விஜயகாந்த் அந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அஜித் மற்றும் விஜய் ஆகியோர்தான் விவேக்குடன் நடிக்க மறுத்த அந்த டாப் நடிகர்கள் என கூறப்படுகிறது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…