More
Categories: Cinema News latest news

ஹிட் படங்களின் இயக்குனர்கள் இந்த நடிகர்களா…! ஆச்சரியப்படுத்தும் சூப்பர் லிஸ்ட்…

தமிழ் சினிமாவின் சூப்பர் வரவேற்பு பெற்ற இயக்குனர்கள் சிலர் பின்னர் இயக்குவதை விட்டு நடிப்பிற்கு திரும்பினர். அப்படி நாம் கண்டு ரசித்த சில நடிகர்கள், இயக்கிய போது எடுக்கப்பட்ட படங்கள் சூப்பர் தகவல் உங்களுக்காக.

ரவி மரியா:

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நாயகனாகவும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருபவர் ரவி மரியா. இவர் தான் நடிகர் ஜீவாவை அறிமுகப்படுத்தியவர். இவர் இயக்கத்தில் வெளியான ஆசை ஆசையாய் படம் தான் அது. நல்ல வரவேற்பை பெற்ற படம் என்றாலும் அவருக்கு தொடர்ந்து இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் கண்ணா:

உதவி இயக்குனராக இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் ரமேஷ் கண்ணா. ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். இவரின் இயக்கத்தில் வெளியான தொடரும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித், தேவயாணி, ஹீரா உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: ரசிகர்களை கண்ணீர் விட வைத்த டாப் 5 படங்கள்… நீங்க மிஸ் பண்ணாம பாருங்க…

தம்பி ராமையா:

தமிழ் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரங்களுக்கு அடிப்படும் பெயர்களில் இவரும் இருப்பார். அதிலும், கும்கி படத்தில் இவர் பெரிதாக அறியப்பட்டார். அதுவே பழகிடும் என்ற டயலாக்கை இவரினை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றது. இவரும் இயக்கி இருக்கிறார். மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.

மனோபாலா:

தமிழ் சினிமாவில் சந்தானத்திற்கு டப் கொடுப்பவர் மனோபாலா. அதிலும் இவர்களின் காம்போவில் வெளியான கலகலப்பு படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் மனோபாலா மிகச்சிறந்த இயக்குனர் என்பது தெரியுமா? இவரின் இயக்கத்தில் 22 தமிழ் படமும், ஒரு இந்தி, ஒரு கன்னட படத்தினையும் இயக்கி இருக்கிறார். பிள்ளை நிலா, ஊர் காவலன் உள்ளிட்ட சில படங்கள் இவரின் இயக்கத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். ஜெயராம் நடிப்பில் வெளியான நைனா படம் தான் இவர் இயக்கத்தில் வெளியான கடைசி படம்.

சந்தான பாரதி:

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் சந்தான பாரதி. இவர் சில படங்களினை இயக்கி இருக்கிறார். அதற்கு தேசிய விருதினை கூட வாங்கி இருக்கிறார். 1981ல் வெளியான பன்னீர் புஷ்பங்கள் தான் இவரின் முதல் படம். தொடர்ந்து பல பெரிய நாயகர்களினை இயக்கி செம ஹிட் கொடுத்தார். அதிலும், குணா மற்றும் மகாநதி படத்தினை இவர் தான் இயக்கி இருந்தார். அதற்காக தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

Published by
Akhilan

Recent Posts