Cinema History
சத்யராஜ் கூடலாம் நடிக்க முடியாது… படப்பிடிப்பில் சத்தம் போட்ட முன்னணி நடிகை
ஒற்றை பாடலுக்கு நடனம் ஆடும் சில்க் ஸ்மிதாவை இன்னும் ரசிகர்களுக்கு பிடிக்கத்தான் செய்கிறது. எப்போதுமே ஷூட்டிங்கில் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் சில்க் சில நேரங்களில் கோபம் முகம் காட்டி இருக்கிறாராம். அப்படி தான் இவருக்கும் சத்யராஜ் உடன் முட்டிக் கொண்டதாக தெரிகிறது.
தமிழ் சினிமா நாயகிகளை கொண்டாடிய காலத்தில், வேறு ஒரு நடனத்திற்கு ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் சில்க் ஸ்மிதா. அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களில் சில்க் பாடல் கண்டிப்பாக இடம் பெற்று விடும். கண்ணை மூடிக்கொண்டு என்ன டியூன் போட்டாலும் அது சில்கின் நடனத்தினால் ரசிகர்களிடம் சேர்ந்து விடும். இப்படி இருக்கும் சில்க் ஸ்மிதா படப்பிடிப்புகளில் சில நேரம் தனக்கு எதும் பிரச்சனை ஏற்பட்டால் கொதித்து விடுவாராம்.
ராம.நாராயணனின் இயக்கத்தில் உருவான படம் ‘சட்டத்தைத் திருத்துங்கள்’. இப்படத்தில் மோகன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தில் ஒரு பாடலுக்கு சில்க்கை நடனம் ஆட படக்குழு அணுகி இருந்தது. அவருடன் சத்யராஜ் இணைந்து நடனம் ஆடுவதாக கூறப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அப்பாடலுக்கான படப்பிடிப்புகள் துவங்கியது. சத்யராஜின் ஆரம்பகாலம் என்பதால் அவருக்கு சுத்தமாக நடனம் ஆடவே தெரியாதாம். அப்போது ஒரு காட்சியில் சில்குடன் இணைந்து ஆடும் போது அவரின் காலை மிதித்து விட்டார் சத்யராஜ். இது சில்க் ஸ்மிதாவிற்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஆளுடன் இனி நடிக்கவே மாட்டேன் என சென்றுவிட்டார் சில்க். அவரிடம் சென்ற ராம நாராயணன், சத்யராஜுக்கு நடனம் ஆட தெரியாது. இது முதல் தடவை. அதுதான் இப்படி செய்து விட்டார். அவர் பெரிய இடத்து பிள்ளையம்மா. சினிமா ஆர்வத்தால் கிடைக்கும் பாத்திரங்களில் எல்லாம் நடிக்கிறார் என சமாதானம் செய்தாராம். அதன்பிறகே அப்பாடல் படப்பிடிப்பு நடந்து இருக்கிறது.
ஆனால், இந்த சண்டைக்கு பின்னர் சில்க், சத்யாராஜூடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயகாந்தை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த சத்யராஜ்… அசத்தலான ‘அந்த’ கதை தெரியுமா.?!