Cinema History
புன்னகை மன்னன் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை… சைடு கேப்பில் தட்டிய ரேகா
தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் பூர்ணிமா பாக்கியராஜ். சினிமாவில் பீக்கில் இருந்தப்போதே திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தார். இவருக்கு முதல் படம் புன்னகை மன்னன் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது கை நழுவியது.
கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான படம் புன்னகை மன்னன். இப்படத்தில் நடிகர் கமல் நடித்திருந்தார். இப்படத்திற்கு முதலில் நாயகி வாய்ப்பு வந்தது பூர்ணிமாவிற்கு தானாம். நடனத்தை கதை களமாக கொண்டு அமைந்த படம் என்பதால் பூர்ணிமாவும் அதில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு துவங்க எல்லா பணிகளும் நடைபெற்றது. ஆனால் கமலுக்கு ஒரு விபத்தில் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தினராம். தொடர்ந்து, இரண்டு முறிவுகள் ஏற்பட படப்பிடிப்பும் தள்ளிக்கொண்டே சென்றுள்ளது. மாதக்கணக்கு இல்ல வருட கணக்காக தாமதம் ஏற்பட்டது.
முதலில் புன்னகை மன்னன் படத்திற்கு பூர்ணிமாவை மிகுந்த சிரமப்பட்டே தேர்வு செய்து இருக்கிறார்கள். 2 வருடம் அதற்காக காத்திருந்த பூர்ணிமா இடையில் கிடைத்த எல்லாம் வாய்ப்புகளுக்கும் நோ சொல்லி இருக்கிறார்.
இதை படிங்க:பாலசந்தர் பொழப்புல மண்ணை அள்ளி போட்ட எம்.ஜி.ஆர்…! இயக்குனர் எடுத்த அதிரடியான முடிவு…
இப்படத்தின் தாமதம் தொடர்ந்து நடந்தது. இதற்கிடையில், அவருக்கு ஒரு மலையாள படத்தின் வாய்ப்பு வந்ததாம். புன்னகை மன்னன் எப்போது தொடங்கும் என தெரியவில்லை. இதனால், மலையாள படத்தை ஒப்புக்கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். அதை பாலசந்தரிடம் கூறினாராம். ஆனால் அவர் புன்னகை மன்னனிற்கு வெயிட் செய்யுமாறு கேட்டிருக்கிறார். மலையாள படம் தானே என மீண்டும் தன்னிலையை விளக்க ஓகே சொல்லினாராம். பின்னரே, சிறுது மாற்றத்துடன் இயக்கப்பட்டது புன்னகை மன்னன். நடிகையாக ரேகா நடித்து மாஸ் ஹிட் அடித்த படம்.
மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் உருவான படம் மஞ்சல் விரிந்த பூக்கள். அப்படம் பூர்ணிமாவின் சினிமா வாழ்க்கைக்கு பெரிய தொடக்கமாக அமைந்தது. மலையாள பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட்டாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், மலையாள சினிமாவிற்கே முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தால் பூர்ணிமாவிற்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் ஒரு மேடையில் பேசிய பாலசந்தர் தான் பூர்ணிமா என்னும் நடிகையை மிஸ் செய்துவிட்டதாக கூறினார்.