சினிமா பிரபலங்கள் செய்த விவாகரத்தும்...ஷாக்கிங் காரணங்களும்...
தமிழ் சினிமாவில் காதலித்து ஒற்றுமையாக திருமணம் செய்து கொண்டு வாழ்வோரும் இருக்கிறார்கள். அதே வேளையில், திருமண வாழ்க்கைக்கு டாடா காட்டி விட்டு விவகாரத்து வாங்கிய பிரபலங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி விவகாரத்தில் கூட விளையாட்டாய் காரணம் சொன்ன சில பிரபலங்கள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
பிரபுதேவா-ராம்லதா:
தமிழ் சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் எனப் புகழப்படுபவர் நடிகர் பிரபுதேவா. இவருக்கும் ராம்லதா என்பருக்கும் 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால், 15 வருட திருமண வாழ்க்கையை 2010ம் ஆண்டு முறித்துக் கொண்டனராம். அதற்கு காரணமே நயன் தான் எனக் கூறப்படுகிறது. அப்போதே நயன் மற்றும் பிரபுதேவா லிவ் இன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் ஜோடியாகவே வந்தனர். இவர்கள் காதலை பிரபுதேவாவே ஒரு பேட்டியில் போட்டு உடைத்தார். இதை தொடர்ந்து தனது மனைவியிடம் விவகாரத்து கோரினார். ஆனால் அவர் மனைவி முதலில் சம்மதம் கூறவில்லை. தன் கணவர் வீட்டை கவனிக்கவில்லை என கோர்ட் படி ஏறினார். இதனால் நயன் மற்றும் பிரபுதேவாவிற்கு எதிராக அப்போதே பல போராட்டங்கள் நடந்தது. இதை தொடர்ந்தே, ராம்லதாவிடம் இருந்து விவகாரத்து கிடைத்தது. ஆனாலும் விதி பிரபுதேவாவிற்கு பல்பு கொடுத்து லவ்வை கெடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
கமல்- வாணி கணபதி:
உலகநாயகன் சினிமாவில் டாப் ஸ்டாராக இருப்பவர். இவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதுமே சர்ச்சையாகவே சென்று கொண்டு இருக்கிறது. 1978ல் வாணி கணபதி என்பரை திருமணம் செய்து கொண்டார். முதலில் நல்லபடியாக சென்ற திருமண வாழ்க்கையில் திடீரென புயல் அடிக்கத் துவங்கியதாம். கமல் வீட்டில் தனியாக வாழத்துவங்கினாராம். வாணி இருந்தும் அவரிடம் பேசுவதே இல்லையாம்.
இதனால் கடுப்பான அவர் இனிமேல் வாழ முடியாது எனக் கூறி தனது 10 வருட கல்யாண வாழ்க்கையை முறித்துக் கொண்டார். இவர்கள் விவகாரத்திற்கு குழந்தை பெற்றுக்கொள்ள வாணி விரும்பாததால் தான் கமல் அவரிடம் இருந்து விலக தொடங்கினார் எனக் கூறப்படுகிறது.
அவரை தொடர்ந்து, நடிகை சரிகா என்பவரை 1988ல் கமல் மறுமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் என இருமகள் இருக்கிறார்கள். இவருடன் 16 வருடம் கமல் வாழ்ந்தார். ஆனால் சரிகா கமலிடம் இருந்து விவகாரத்து கோரினார். அதற்கு காரணம் கமல் கௌதமியின் கிசுகிசுக்கள் தானாம்.
ஏ.எல்.விஜய்-அமலாபால்:
தமிழ் சினிமாவில் வைரல் ஜோடியாக பேசப்பட்டவர்கள். ஒரு கட்டத்தில் ஆஹா சொல்ல வைத்த ஜோடி சடாரென்று 2017ல் விவகாரத்து அப்ளே செய்தனர். இதுகுறித்து விசாரித்ததில், இவர்களின் விவகாரத்திற்கு காரணம் தனுஷ் தான் எனக் கூறப்படுகிறது. கல்யாணத்திற்கு பின்னர் அமலா நடிக்க கூடாது என்பது மாப்பிள்ளை வீட்டின் கண்டிஷனாக இருந்ததாம். ஆனால் தனுஷ் தான் அவரின் அம்மா கணக்கு படத்தில் நடிக்க அமலாவை நாடி இருக்கிறார். இதில் ஏற்பட்ட மன கசப்பு தான் விவகாரத்து வரை சென்றதாக கூறப்படுகிறது.
அரவிந்த்சாமி- காயத்ரி ராம்:
தமிழ் சினிமாவின் 90ஸ் சாக்லேட் பாய். இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். ஆனால் இவரால் மனைவியுடன் வாழ முடியவில்லை என்பது தான் சோகம். இவர் தனது மனைவி காயத்ரி ராமுடன் 9 வருடம் மட்டுமே வாழ்ந்தார். இதை தொடர்ந்து சில கசப்புகளால் இருவரும் பிரிந்தனர். ஆனால், தன் மனைவியை சும்மா அனுப்பவில்லையாம். 75 லட்ச ரூபாய் ஒரே தவணையில் கொடுத்து மாதம் 1 லட்சத்தை பராமரிப்பு செலவாகவும் கொடுத்து வருகிறாராம். பிள்ளைகள் இருவரையும் அரவிந்த்சாமி தான் வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு என்ன காரணம்?- பரவும் தகவல்கள்
தனுஷ்-ஐஸ்வர்யா:
விவகாரத்திற்கு புது வரவு. சூப்பர்ஸ்டாரின் மகள் மற்றும் தமிழ் சினிமாவின் டாப்ஸ்டார் என்பதாலே இவர்கள் பிரிவு பலராலும் பேசப்பட்டது. பெரிய வைரலாக மாறியது. 18 வருட திருமண வாழ்க்கை முறிந்ததாக சமீபத்தில் தான் அறிவித்தனர். இவர்கள் பிரிவுக்கு காரணமாக தனுஷை தான் கூறுகிறார்கள். எப்போதுமே வேலை வேலை என இருக்கும் தனுஷ் குடும்பத்தை கவனிப்பது இல்லையாம். இது ஐஸ்வர்யாவிற்கு பெரிய குறையாக இருந்து இருக்கிறது.
தனுஷ் பக்கமோ ஐஸ்வர்யா பார்ட்டி என ஊர் சுற்றுகிறார் எனக் கிசுகிசுக்கிறார்கள். இப்படி இரு பக்கமும் வரிசையாக குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரே நல்ல விஷயம் இதில் இருவரும் இன்னமும் விவகாரத்திற்கு அப்ளே செய்யவில்லையாம். இதற்கு ரஜினிகாந்த் தான் எனக் கூறப்படுகிறது. அவர் தனது மூத்த மகளை எப்படியாவது தனுஷுடன் மீண்டும் சேர்த்து வைக்க படாதப்பாடுபட்டு வருகிறாராம். விரைவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனக் கிசுகிசுக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.