தமிழ் ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்த டாப் கிரிக்கெட்டர்கள்... அச்சோ இவங்களுமா?

by Akhilan |   ( Updated:2022-09-20 07:22:19  )
தமிழ் ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்த டாப் கிரிக்கெட்டர்கள்... அச்சோ இவங்களுமா?
X

தமிழ் சினிமா நடிகைகள் சிலர் படங்கள் அடிக்காத ஹிட். நிஜ வாழ்க்கை நேர்மாறாக செம வைரலாக இருந்தது. இந்திய அணியின் டாப் கிரிக்கெட்டர்கள் உடன் இவர்கள் செய்த டேட்டிங் தான் வைரலுக்கு காரணம். அந்த வகையில் அவர்கள் காதலில் ஆட்டம் போட்டனர். இவர்கள் காதல் ஹிட் அடிக்கவில்லை என்பது தான் இதில் ரொம்ப கவலையான சேதி.

ராய்லட்சுமி- தோனி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி. இவருக்கும் தமிழ் நடிகையான லட்சுமி ராயிற்கும் செம லவ்வாங்கி இருந்ததாம். ரெய்னாவின் நெருங்கிய நண்பர் ராய்லட்சுமி. அவரின் மூலம் தோனியுடன் பழகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. இருவரும் நண்பர்களாகி பின்னர் டேட்டிங்கில் காலத்தை கழித்திருக்கிறார்கள். தோனி ப்ரோபோஸ் செய்வார் என ராய் லட்சுமி வெயிட்டிங்கில் இருக்க, தல சத்தமே இல்லாமல் சாக்ஷியுடன் கல்யாணத்தையை முடித்துவிட்டார். வட போச்சே!

நக்மா- சவ்ரவ் கங்குலி:

இந்திய கிரிக்கெட் அணியின் தாதா சவ்ரவ் கங்குலி. தமிழ் நடிகை நக்மாவுடன் 90களில் பெரிதாக கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஒருமுறை சிவன் கோவிலுக்கு இருவரும் சென்று இருக்கிறார்கள். அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் திருமணம் ஆக வேண்டுதலுக்கே இங்கு வந்ததாக செய்திகளை வெளியிட்டனராம். இதில் கடுப்பான கங்குலி ஏன்ப்பா நான் அல்ரெடி திருமணமானவன். என்னை ஏன் பிரச்சனையில் மாட்டிவிடுகிறீர்கள் என அதிருப்தி தெரிவித்தாராம். அப்புறம் நக்மா பக்கம் திரும்பவே இல்லையாம்.

ஸ்ரேயா சரண்- ஸ்ரீகாந்த்:

இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீகாந்த், தமிழ் நடிகையான ஸ்ரேயாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த ஜோடி பல இடங்களில் சுற்றி திரிந்தனர். ஒருமுறை டின்னர் சென்றபோது பத்திரிக்கை கேமராக்களில் சிக்கினர். அந்த செய்தி பூதாகரமான நிலையில், ஸ்ரேயா இந்த காதல்களுக்கெல்லாம் நேரம் இல்லை. அதுமில்லாமல் என்னால் விளையாட்டு வீரர்களை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது என ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். ஆனால் தற்போது ஒரு டென்னிஸ் வீரரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உங்களுக்கு வயசே ஆகாதா? செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் ஸ்ரேயா சரண்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துடன் கிசுகிசுக்கப்பட்டவர் ஊர்வசி ரவுடெலா. அது யாருப்பானு கேட்கிறீர்களா? அதாங்க, லெஜண்ட் படத்தின் நாயகி தான். இவருக்கும் ரிஷப் பந்துக்கும் செம டேட்டிங் நிகழ்வுகள் எல்லாம் நடந்ததாம். ஒருகட்டத்தில் ஊர்வசியிடன் இதுகுறித்து கேட்டப்போது, உண்மை தான். திருமணம் செய்ய அவரிடம் கேட்டேன். ஆனால், அவர் நோ சொல்லிவிட்டதாக தெரிவித்து இருந்தார். மொத்தத்தில் ப்ரேக் அப் தான்.

கே.எல்.ராகுல்-நித்தி அகர்வால்:

கிரிக்கெட் மற்றும் நடிகை காம்போவில் சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்ட ஜோடி கே.எல்.ராகுல், நித்தி அகர்வால். இருவரும் நைட் கிளப்பில் அடிக்கடி ஜோடியாக காட்சி கொடுத்திருக்கின்றனர். இதனால் ஒருவரும் லவ்வாங்கியில் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. இதில் கடுப்பான ராகுல் அடடா! நாங்க நண்பர்கள் தான். நான் கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்னரே நித்தியை எனக்கு தெரியும். நாங்க பெங்களூரில் படித்தோம் எனக் கூறி பெரிய முற்றுப்புள்ளியை வைத்தார். நித்தி அகர்வால் இப்ப சிம்பு கூட கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

ஜஸ்பிரித் பும்ரா- அனுபமா:

எல்லா ஜோடிகளிலும் செம ஹாட் டாப்பிகாக சென்றது இவர்கள் தான். தமிழில் நடித்து வரும் அனுபமா இந்திய பந்துவீச்சாளர் பும்ராவுடன் லவ்வில் இருந்ததாக கூறப்பட்டது. சீக்கிரம் இவர்கள் திருமணம் எனக் கிசுகிசுக்கப்பட்டது. பும்ரா திருமணத்தின் போது அவர் விடுமுறை எடுக்க அதே நேரத்தில் அனுபமாவும் சமூக வலைத்தளங்களில் லீவ் எடுக்க விஷயம் காட்டுத்தீயாகியது. சரி இருவரும் தான் திருமணம் என அடித்து சத்தியம் செய்ய தொடங்கினர். ஆனால் சஞ்சனாவுடன் திருமணம் செய்துக் கொண்டு இந்த விஷயத்துக்கு மூடுவிழா செய்தார்.

Next Story