ஒரே படம்!.. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 5 நடிகைள்.. சும்மா கொட்டுது கோடி!..

Published on: January 21, 2024
srinidhi
---Advertisement---

Actress : சினிமாவில் சில நடிகைகள் பல வருடங்களாக நடிப்பார்கள். ஆனால், இப்படி ஒரு நடிகை இருக்கிறார் என தெரியுமே தவிர பெரிய வாய்ப்புகள் வராது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு வராது. பெரிய அளவில் சம்பளமும் வராது. சில லட்சங்களை வாங்கிக்கொண்டு நடித்து வருவார்கள்.

பல படங்களிலும் நடித்தும் நமது மார்க்கெட் ஏறவில்லையே என புலம்பும் பல நடிகைகள் இங்கே இருக்கிறார்கள். அதேநேரம் சில நடிகைகளின் மார்க்கெட்டை அவர்கள் நடிக்கும் ஒரு படம் எங்கேயோ கொண்டு சென்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக மாற்றிவிடும். அப்படி ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 5 நடிகைகள் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் குடும்பத்தையே அசிங்கப்படுத்திட்டாரு விஷால்!.. எல்லாமே போலி நாடகம்.. ஷாக் கொடுத்த பிரபலம்!

5வது இடத்தில் இருப்பவர் சமந்தா. கொஞ்சம் டல்லாக இருந்த இவரின் மார்க்கெட் பேன் இண்டியா படமாக வெளிவந்த புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு பின் மேலே போனது. ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு கோடி வாங்கி வருகிறார். மேலும், இவரின் சம்பளமும் சில கோடிகள் ஏறிவிட்டது. 3லிருந்து 5 கோடி வரை இவர் சம்பளம் வாங்குகிறார்.

samantha
samantha

4வது இடத்தில் இருப்பவர் பூஜா ஹெக்ட்டே. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் 2023ம் வருடம் 6 கோடி வரை இவர் சம்பளம் பெற்றார். ‘அலவைகுந்தபுரமுலோ’ என்கிற படத்தின் மாபெரும் வெற்றி இவரின் மார்க்கெட்டை தூக்கிவிட்டது. 2023ம் வருடம் சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு ஹிந்தி படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: பிடிக்காம நடிச்ச படம்!.. ஆனா படம் பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத சிம்ரன்!..

3வது இடத்தில் இருப்பவர் ஸ்ரீநிதி ஷெட்டி. கேஜிஎப் படம் வருவதற்கு முன் இப்படி ஒரு நடிகை இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. கேஜிஎப், கேஜிஎப்2 ஆகிய படங்களின் வெற்றி இவரை 7 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக மாற்றியிருக்கிறது. விக்ரமுடன் கோப்ரா படத்திலும் இவர் நடித்திருந்தார்.

2வதாக மார்கெட்டே இல்லாமல் இருந்த திரிஷாவை ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி மீண்டும் பிஸியான நடிகையாக மாற்றிவிட்டது. அதன்பின் விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி என டேக் ஆப் ஆகிவிட்டார். இவரும் தனது சம்பளத்தை ஏற்றிவிட்டார். முதலிடத்தில் இருப்பது நயன்தாராதான். ஷாருக்கானுடன் நடித்த ஜவான் படத்திற்காக இவர் ரூ.11 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்த படத்தின் வெற்றி இவரை பேன் இண்டியா நடிகையாக மாற்றியிருக்கிறது.

இதையும் படிங்க: நண்பேன்டாவுக்கு ஆப்பு வச்ச சந்தானம்!.. ஆனாலும் ரகசியமா உதவும் உதயநிதி ஸ்டாலின்.. எப்படி தெரியுமா?..