டாப் 5 நடிகைகளின் 50வது படம் வெற்றியா? தோல்வியா?!.. தட்டி தூக்கிய தமன்னா!...
திரையுலகில் நடிகர் என்றாலும் சரி, நடிகையானாலும் சரி 25வது, 50வது மற்றும் 100வது படங்கள் என்பது அவர்களுக்கு ஸ்பெஷல்தான். பல நடிகர், நடிகைகள் 50ஐ கூட தொடாமல் போவதுண்டு. சிலர் மட்டுமே 100 படங்களை தொடுவார்கள். இப்போது ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் 100 படங்களை தொட்டது ரஜினியும், கமலும் மட்டுமே.
அதேபோல், 50வது படங்களை தொட்ட நடிகைகள் பற்றியும், அந்த படங்கள் ஓடியதா என்பது பற்றியும் பார்ப்போம். குறுகிய காலகட்டத்திலேயே அதிக படங்களில் நடித்தவர் என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே. வளரும் நேரத்திலேயே காக்கா முட்டை படத்தில் 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தவர். இவரின் 50வது திரைப்படம் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’. இந்த படம் ஓடவில்லை.
வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த பல நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். விஜயுடன் துப்பாக்கி, அஜித்துடன் விவேகம் என பல படங்களில் நடித்தவர். அழகாகவும் இருப்பார். சிறப்பாக நடனமும் ஆடுவார். கோலிவுட்டின் முக்கிய நடிகர்கள் எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவரின் 50வது திரைப்படமான ‘கோமாளி’ சூப்பர் ஹிட் அடித்தது.
20 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருபவர் திரிஷா. இவரின் மார்க்கெட் பங்கு சந்தை போல திடீரென ஏறும். திடீரென இறங்கிவிடும். நயன்தாராவுக்கு முன்பே சினிமாவுக்கு வந்தும் இவரால் லேடி சூப்பர்ஸ்டார் ஆக முடியவில்லை. பொன்னியின் செல்வன் ஹிட்டுக்கு பின் பெரிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவருடைய 50வது படமான தூங்காவனம் படம் ஓடவில்லை.
மும்பையிலிருந்து கிளம்பி வந்து கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருபவர் தமன்னா. தமிழில் எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இவர் ஆடியா ‘காவாலா’ பாடல் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி 2 இவரின் 50வது படமாக வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை பல வருடங்களாக தக்க வைத்திருக்கும் நடிகை இவர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் படம் இவரின் 50வது படமாகும். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.