மனசாட்சியே இல்லையா உங்களுக்கு... தமிழ் சினிமாவில் 2022ல் வெளிவந்த டாப் 5 மொக்கை படங்கள்..

by Akhilan |
மனசாட்சியே இல்லையா உங்களுக்கு... தமிழ் சினிமாவில் 2022ல் வெளிவந்த டாப் 5 மொக்கை படங்கள்..
X

Actors

தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் படங்கள் வந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தான் மொக்கை படங்களும் ரிலீஸாகி வருகிறது. இந்த வருடம் முடிய இருக்கும் இந்த நேரத்தில் 2022ல் வெளிவந்து மொக்கை வாங்கிய டாப் 5 படங்கள் குறித்த தகவல்கள்.

வீரமே வாகை சூடும்:

வீரமே வாகை சூடும் 2022ல் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம். இப்படத்தினை து.பா.சரவணன் எழுதி இயக்கி இருந்தார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த இப்படத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி, பாபுராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் 4 பிப்ரவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் நல்ல வரவேற்பை பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் வணிகரீதியான தோல்வி படம் என அறிவிக்கப்பட்டது.

veeramae vagai soodum

கொம்பு வச்ச சிங்கமடா:

கொம்பு வச்ச சிங்கம்டா எஸ்.ஆர் பிரபாகரன் எழுதிய இயக்கிய திரைப்படம். இப்படத்தில் சசிக்குமாருடன் சூரி, மகேந்திரன், ஹரீஷ் பெராடி மற்றும் இந்தர் குமார் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்து இருந்தார். 13 ஜனவரி 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி படமாகும்.

kombu vacha singamada

ஹே சினாமிகா:

மதன் கார்க்கி எழுதி, பிருந்தா இயக்கிய திரைப்படம் ஹே சினாமிகா. இப்படத்தின் தலைப்பு ஓ காதல் கண்மணியில் ஒரு பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 3ந் தேதி திரைக்கு வந்தது.

கடைசி விவசாயி:

கடைசி விவசாயி 2022ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இப்படத்தினை எம். மணிகண்டன் எழுதி, இயக்கி இருக்கிறார். இப்படத்தில் எண்பத்தைந்து வயது விவசாயி நல்லாண்டி, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இது ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரித்து 11 பிப்ரவரி 2022 அன்று வெளியிடப்பட்டது.

மாமனிதன்:

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாமனிதன். யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, கே.பி.ஏ.சி.லலிதா, குரு சோமசுந்தரம், அனிகா சுரேந்திரன், ஜூவல் மேரி மற்றும் ஷாஜி சென் ஆகியோர் நடித்துள்ளனர். ஐந்து வருடங்கள் தாமதமாகி, இந்தப் படம் 24 ஜூன் 2022 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி படமாக தான் அமைந்தது.

Next Story