ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்!.. பூனைக்கு மணி கட்டிய முன்னணி ஹீரோ.. நேம் டேமேஜால் காண்டாகிட்டாராம்!..

தெரியாத்தனமா உங்கக்கிட்ட போய் அப்படியொரு நல்ல விஷயத்தை செய்யச் சொல்லிட்டேன், தயவு செய்து இனிமேல் எதுவும் செய்யாமல் அமைதியா இருங்க என்றே ஆர்டர் போட்டு விட்டாராம் அந்த முன்னணி நடிகர்.

இக்கட்டான சூழலில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள் என நடிகர் ஆணையிட அவரது ஆர்மியினர் இப்போ பாருங்க தலைவா என தண்டோரா போட்டு உதவிகளை செய்கிறேன் என்கிற பெயரில் முன்னணி ஹீரோவின் முகத்தில் கரியை பூசும் வேலைகளை படு ஜோராக செய்து விட்டனர்.

இதையும் படிங்க: புது படத்துக்காக லவ்டுடே பிரதீப் செஞ்ச வேலை!. இப்படி சிக்கிட்டாரே!.. இதெல்லாம் தேவையா புரோ!..

ஏகப்பட்ட ட்ரோல்களும், மீம்களும் நடிகரை நாரடித்து வந்த விஷயம் சிவனேன்னு ஷூட்டிங்கில் ஜாலியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகரின் காதுக்கு வந்து விழுந்த நிலையில், நல்லது செய்ய சொன்னது ஒரு குத்தமாடா, அதுக்குன்னு இப்படியாடா எனக்கு காரியம் பண்ணுவீங்க என கண்டபடி கேட்டு வெளுத்து வாங்கி விட்டாராம்.

இனிமேல், நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்றும் ஏற்கனவே எப்ப எப்பன்னு காத்துட்டு இருக்கவங்களுக்கு நீங்களே வான்ட்டட்டா போய் இப்படி கன்டென்ட் கொடுக்கிறீங்களே, உங்களுக்கு எந்த பாதிப்பும் இதனால் வராது, கெட்டுப் போறது என்னோட பெயர் தான் என செம கடுப்பாகி விட்டாராம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் பத்தி பொய் நியூஸ் சொல்லியே கொன்னுட்டீங்களேடா!.. மன அழுத்தத்தால் இறந்த ரசிகர்…

அதே நேரத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நல்ல செயல்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்த ரசிகர்களுக்கு போன் செய்து பேசி வாழ்த்து சொல்லியிருக்கிறார் அந்த முன்னணி ஹீரோ என தகவல்கள் கசிந்துள்ளன.

 

Related Articles

Next Story