தொடர் தோல்வியால் துவண்டு போன நடிகை…. ஆறுதல் கூறும் சாக்கில் ரூட்டு போட்ட நடிகர்….!

Published on: May 27, 2022
gossip news
---Advertisement---

ஆரம்பகாலத்தில் அழகாக இருந்த அந்த நடிகை தென்னிந்திய சினிமாவில் நடித்தது போதும் இனி பாலிவுட் பக்கம் போகலாம் என்ற ஆசையில் நன்றாக இருந்த உடம்பை குறைப்பது, பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது என அவரது அழகை அவரே கெடுத்து கொண்டார்.

ஆனால் அவர் பட்ட கஷ்டத்திற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது வரை நடிகைக்கு எந்தவொரு பாலிவுட் வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். அது கூட பரவாயில்லை தென்னிந்திய சினிமாவில் சமீபத்தில் அவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், நடிகை கவலையில் உள்ளாராம்.

ஒருமுறை தான் நடித்த படத்திற்காக தேசிய விருது பெற்றதால் அடுத்தடுத்து விருது கிடைக்கும் என நடிகை எதிர்பார்ப்பதும் கொஞ்சம் ஓவர் தான் என கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் தொடர் தோல்வி காரணமாக நடிகை வீட்டிலும் நீ நடிச்சதெல்லாம் போதும் என பெற்றோர்கள் கூறி விட்டார்களாம்.

தொடர் தோல்வி மற்றும் பெற்றோர்களின் திருமண ஏற்பாடுகளால் மனம் நொந்து நடிகை வருத்தத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த ஒல்லி நடிகர் நடிகைக்கு ஆறுதல் கூறுவது போல தனியாக ரூட்டு போட்டு வருகிறாராம்.

அதன்படி சமீபத்தில் ஒடிடியில் வெளியான அந்த நடிகையின் படத்தைப் பார்த்து ஆஹா ஓஹோ என பாராட்டியதோடு நிச்சயம் அந்த படத்திற்காக உங்களுக்கு விருது கிடைக்கும் என நடிகையை ஏகபோகத்திற்கு புகழ்ந்து தள்ளி விட்டாராம் அந்த ஒல்லி நடிகர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.