விஜய் சேதுபதி – விக்ரம் – கார்த்தி.! ஒரே நாளில் களமிறங்கும் டாப் ஹீரோக்கள்… பின்னணி இதுதான்…

Published on: July 21, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் வெள்ளிகிழமை என்றாலே படங்கள் வந்து குவிந்து விடும். அந்த வகையில், சமீப காலமாக பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்து வருகிறது. அது கொரோனா காலம் முடிந்த பின்பு முன்னணி ஹீரோக்களின் படங்கள் எல்லாம் ரிலீசாகி விட்ட சூழ்நிலையில், தற்போது ஒருநல்ல செய்தி கிடைத்துள்ளது.

அதாவது, ஒரே நாளில் திரில்லர் படமும், கிராமத்து படமும் மற்றும் பேய் படமும் களமிறங்க இருக்கிறது. அதன்படி, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கேமியா ரோலில் நடிக்க ஆண்ட்ரியா டைட்டில் ரோலில் நடித்துள்ளார். நீண்ட நாள் கழித்து பேய் படம் ஒன்று திரையரங்கில் வெளியாகிறது என்றால், அது இந்த படமாக தான் இருக்கும். இந்த படம் ஆக்ஸட் 31 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது.

viruman

இதனை தொடர்ந்து, கொம்பன் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் முத்தையாவுடன் ‘விருமன்’ படத்திற்கு மீண்டும் இணைந்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படமும் ஆக்ஸட் 31 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது.

இதையும் படிங்களேன் – நைட் ஃபுல்லா தளபதிய பாத்துட்டே இருப்பேன்… பிறந்தநாளுக்கு அத செஞ்சே ஆகணும்… வெட்கப்படும் இளம் நடிகை…

இதற்கிடையில், உலக நாயகன் கமல்ஹாசன் போல் நடிகர் விக்ரம் ஏகப்பட்ட கெட்டபில் நடித்து முடித்துள்ள படம் தான் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இது ஒரு விதியசமான கதைக்களமாக அமைந்துள்ளது. கோப்ரா ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வேலைகள் முடியாத காரணத்தால் இப்படமும் ஆகஸ்ட் 31க்கு தள்ளி போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்பொது, இந்த மூன்று படங்களும் வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி தான் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மோத தயாராக இருக்கிறது என்றே சொல்லலாம்,  மூன்று படங்களும் நல்ல கதை அம்சத்தை கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.