சினிமாவில் டாப் ஹிட் நாயகிகள்.. படிப்பில் எப்படி தெரியுமா? நம்பர் நடிகைஸ் என்னமா இது?

by Akhilan |
சினிமாவில் டாப் ஹிட் நாயகிகள்.. படிப்பில் எப்படி தெரியுமா? நம்பர் நடிகைஸ் என்னமா இது?
X

heroines

தமிழ் சினிமாவில் நடிப்பில் சக்கை போடு போடும் நாயகிகள் படிப்பில் எப்படி தெரிந்து கொள்ளணுமுல. நமக்கு பிடிச்ச டாப் 5 நடிகைகளின் கல்வி தகுதி உங்களுக்காக

நயன்தாரா:

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. அம்மணிக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்த நிலையில், அந்த புயல் கூட ஓயாத வேளையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகவே மாறிவிட்டார். இப்படி இருக்க நயன் பி.ஏ இங்கிலீஷ் படிச்சிருக்காங்கலாம். இங்கிலீஷ் பேசினாலும் வேணாம் விட்ருவோம்.

நாயகிகள்

த்ரிஷா:

பொன்னியின் செல்வன் குந்தவையாக வந்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். 20 வருடத்துக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் த்ரிஷாவிற்கு வயது ஏறுதா இல்லையானே தெரியாத அளவு இன்னும் இளமையாகவே இருக்கிறார். அம்மணி படிச்சது என்ன தெரியுமா? பி.பி.ஏவாம்.

சமந்தா:

சமந்தா எப்போதுமே துள்ளலாகவே வலம் வருபவர். அவரின் நடிப்புக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். தனது முக அசைவில் மொத்த கூட்டத்தையுமே சாட்சிவிடுவார். மைட்டோசிஸால் பாதிக்க பட்டிருக்கும் சமந்தாவிற்கு, ஐ லவ் யூ கண்மணி என அவர் ரசிகர்கள் ஆறுதல் தூதில் லவ் சொல்லி கொண்டிருக்கின்றனர். சமந்தா படிச்சதோ பி.காம்.

சாய் பல்லவி:

மலையாளத்தில் முதல் அறிமுகம் என்றாலும் தமிழ் பெண்ணாக நடித்ததால் இங்கையும் பேமஸானவர் தான் சாய் பல்லவி. தமிழில் ரௌடி பேபி என்றாலே அம்மணி தான் நினைவுக்கு வருவார். தமிழ் மற்றும் தெலுங்கு என பிஸி மோடில் சுற்றி வரும் அம்மணி பெரிய படிப்பு படிச்சிருக்காங்க தெரியுமா? ஜார்ஜியால போய் எம்.பி.பி.எஸ் படிச்சிருக்காங்க.

sai pallavi

கீர்த்தி சுரேஷ்:

இது என்ன மாயம் படத்தில் கீர்த்தி அறிமுகமானாலும், மாயமாகவே இருந்தார். அவரின் அழகை மட்டுமல்ல நடிப்பையும் ரசிகர்களிடம் கொண்டு வந்த படம் ரஜினி முருகன் தான். உன் மேல ஒரு கண்ணு என கீர்த்தி செய்யும் ரியாக்‌ஷன்களுக்கு பெண்களே சொக்கி போய் கிடந்தனர். கீர்த்தி பேசன் டிசைனிங்க படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story