எங்களுக்குள்ள எந்த ஈகோவும் இல்ல! டாப் ஹீரோயின்கள் சகோதரிகளாக நடித்து கலக்கிய திரைப்படங்கள்

by Rohini |   ( Updated:2024-02-16 08:24:45  )
ramba
X

ramba

Top Heroines: பிரபலங்கள் ஒரு உயரத்தை அடைந்து விட்டால் தானாகவே அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் தொற்றிக் கொள்ளும். ஒருவர் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடிப்பதா என்று பல பேர் ஈகோ பிரச்சினையால் அந்த படங்களின் வாய்ப்பை தட்டிக் கழிப்பதும் உண்டு. அந்த வகையில் டாப் ஹீரோயின்களாக இருந்த நடிகைகள் ஒன்றாக அதுவும் உடன் பிறந்த சகோதரிகளாக நடித்து கலக்கிய திரைப்படங்களைத்தான் பார்க்க போகிறோம்.

நினைத்தேன் வந்தாய்: விஜய் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் தேவயாணி மற்றும் ரம்பா சகோதரிகளாக நடித்திருப்பார்கள். உண்மையிலேயே இவர்களை பார்ப்பதற்கு உடன் பிறந்த சகோதரிகளாகவே நடித்திருப்பார்கள். இந்தப் படம் வெளியான போது தேவயாணியும் சரி ரம்பாவும் சரி ஒருவருக்கொருவர் பீக்கில் இருந்த நடிகைகள். ஆனாலும் ஒன்றாக நடித்தது பெரிய விஷயம்.

இதையும் படிங்க: அஜித்தால் வாங்கிக் கட்டிய ஜெய்! மேடையில் பொளந்து கட்டிய தயாரிப்பாளர் – இதெல்லாம் தேவையா?

எட்டுப்பட்டி ராசா: நெப்போலியன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுதான் எட்டுப்பட்டி ராசா. கிராமத்து பின்னணியில் உருவான இந்தப் படத்தில் குஷ்பூவும் ஊர்வசியும் அக்கா தங்கைகளாக நடித்திருப்பார்கள். எந்தவொரு ஈகோவும் இல்லாமல் இப்படி நடித்தது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.

வேட்டை: லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் மற்றும் ஆர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் வேட்டை. படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திலும் சமீரா ரெட்டி மற்றும் அமலா பால் ஆகியோர் அக்கா தங்கைகளாக நடித்திருப்பார்கள். ஆனால் இருவரின் மார்கெட்டும் இப்போது எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: படம் ரிலீஸே ஆயிடுச்சி!.. இன்னும் போனி ஆகல!. அப்செட்டில் ரஜினி!.. இதெல்லாம் பாவம் மை லார்ட்…

காதல் பரிசு: கமல் நடிப்பில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. தமிழ் சினிமாவில் வெற்றி சகோதரிகளாக வலம் வந்த அம்பிகாவும் ராதாவும் இந்தப் படத்திலும் அக்கா தங்கையாகவே நடித்திருப்பார்கள். இருவருமே கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்கள்.படம் பெருமளவு வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story