ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த பல நடிகைகள், திடீரென்று காணாமல் போய்விட்டனர். எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. பல படங்களில் ஹிட் கொடுத்து முன்னணி ஹீரோயினாக இருந்தவர்கள் திடீரென இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். ஒரு சில தப்பான முடிவுகளை எடுப்பதாலும், தவறாக கதைகளை தேர்வு செய்து நடித்ததாலும், பலருக்கு சினிமா வாழ்க்கையே முடிந்திருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே, அதிலிருந்து மீண்டு வந்து, விட்ட இடத்தை பிடித்திருக்கின்றனர். பலர் கோட்டைவிட்டு விட்டு காணாமல் போய்விட்டனர். அப்படி நன்றாக நடிக்க தெரிந்தும், பேரையும், புகழையும் பெற்ற பிறகு திடீரென காணாமல் போன 5 தமிழ் நடிகைகளை பற்றி பார்க்கலாம்.
இலியானா
தமிழில் முதலில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதன் பிறகு பாலிவுட்டில் பட வாய்ப்பு வந்ததால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். கடைசியில் பாலிவுட்டில் மார்க்கெட் போய்விட்டதால், சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.
அனுஷ்கா
நடிகை அனுஷ்கா அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக இருந்தார். ஆனால் அவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார். அந்த படமும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதன் பிறகு அனுஷ்காவால், உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்துவருகிறார்.
பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவருக்கு தான் முதலில் துல்கர் சல்மானின் சீதா ராமன் படத்தில் ஹாரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்துகொண்டிருந்ததால், அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு இவர் நடித்த பாலிவுட் படங்கள் சரியாக ஓடவில்லை. தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
அசின்
நடிகை அசின் ஒரு காலத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்தார். எம் குமரன் சம் ஆஃப் மகாலட்சுமி, போக்கிரி, கஜினி என பல ஹிட் படங்களில் நடித்து கொடி கட்டி பறந்தார். இவர் பாலிவுட் சென்றதால், தமிழ் படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அங்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால், திருமணம் செய்துகொண்டு, சினிமாவை விட்டே விலகிவிட்டார்.