கோலிவுட் ஹிட் பாடல்களில் ஒளிந்திருக்கும் டாப் சீக்ரெட்ஸ்... இதை நீங்க கவனிச்சிருக்கீங்களா?

by Akhilan |   ( Updated:2022-11-24 11:14:42  )
கோலிவுட் ஹிட் பாடல்களில் ஒளிந்திருக்கும் டாப் சீக்ரெட்ஸ்... இதை நீங்க கவனிச்சிருக்கீங்களா?
X

Songs

தமிழ் சினிமாவில் சில பாடல்களில் விதவிதமான விஷயங்களை வைத்தே இயக்கி இருப்பர். அதை உற்று கவனித்தால் தான் பலருக்கும் புரிந்து கொள்ள முடியும். அப்படி டாப் ஹிட் கொடுத்த சில பாடல்களில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

12 பி (ஒரு புன்னகை பூவே):

ஷாம்,சிம்ரன், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் 12 பி. இப்படம் வித்தியாசமான கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இயக்குனர் ஜீவா திரைக்கதையில் மட்டுமல்லாமல் பாடலிலும் ஒரு புதுமையை வைத்திருந்தார். ஒரு புன்னகை பூவே பாடல் கால நிலையை வைத்து உருவாகி இருக்கும். முதலில் வெயில், மழை, இலையுதிர் காலம் மற்றும் பனி என வரிசையாக அந்த பாடலில் காட்டி இருப்பார். இந்த பாடலை இயக்கியது ராஜு சுந்தரம்.

கோலிவுட்

12B

பஞ்சதந்திரம் (மன்மத லீலை):

கமலின் நடிப்பில் உருவான பஞ்ச தந்திரம் படத்தில் மன்மத லீலை பாடலில் ஒரு வரியை வாலி எழுதி இருப்பார். ஆயிரம் தொழில் நுட்பம் அறிய வைப்பேன், இந்தியன் யார் என்று புரிய வைப்பேன் என எழுதி இருப்பார். இதற்கு காரணமாக பஞ்சதந்திரம் படத்திற்கு முன்னர் கமல் நடிப்பில் உருவான ஹேராம் படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. அதன் திரைக்கதைக்காகவே ஆஸ்காருக்கு சென்றது. ஆனால் அப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இந்த வருத்தத்தை தான் வாலி அந்த பாடலில் எழுதி இருப்பார்.

Panja thanthiram

வாலி (ஓ சோனா) :

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான படம் வாலி. இப்படத்தில் அஜித் அண்ணன் மற்றும் தம்பி என இரு வேடத்தில் நடித்திருப்பார். அவரின் நடிப்பிற்கே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் ஜோதிகாவிற்கும் அஜித்திற்கும் ஒரு குட்டி காதல் பகுதி இடம் பெற்று இருக்கும். அப்பொழுது வரும் ஓ சோனா பாடலில் வரும் ஒரு ட்யூன் 1970களில் எரிக் சேகர் எழுதிய லவ் ஸ்டோரி மையமாக வைத்து வந்த ஒரு பாடலின் ட்யூனை அப்படியே பயன்படுத்தி இருப்பார்கள். அட அந்த நாவலுக்கு எஸ்.ஜே.சூர்யா ஃபேனாம்!

shajahan

ஷாஜகான் (சரக்கு வச்சிருக்கேன்):

விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி படமாக இருந்த ஷாஜகான். இப்படத்தில் சரக்கு வச்சிருக்கேன் என்ற ஒற்றை பாடலுக்கு மீனா ஆடி இருப்பார். அதில் ஒரு வரி வரும். நாக்கு,மூக்கு நீளமான அழகு புள்ள. நல்ல வேளை கிளிண்ட்ன் கண்ணில் படவே இல்லை என எழுதி இருப்பார். இந்த பாடல் வந்த சமயம் அமெரிக்காவில் பில் கிளிண்ட்ன் மீது நிறைய பெண்கள் பாலியல் புகார் செலுத்தி இருந்தனர். அந்த சம்பவத்தை மையமாக வைத்தே வைரமுத்து இப்படி எழுதி இருப்பார்.

Petta

பேட்ட(உல்லாலா):

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பேட்ட. இப்படத்தில் ரஜினி கல்லூரியில் மாணவர்களுடன் ஆடும்படி அமைந்திருக்கும் பாடல் உல்லாலா. இப்பாடலுக்கான ட்யூன் 2018ல் வந்த கோலமாவு கோகிலா படத்தில் ஒரு சீனில் அமைந்திருந்த பிஜிஎம் தானாம். ஜாக்குலின் யோகிபாபுவை பார்த்து குடிச்சிருக்கியா நீயா எனக் கேட்கும் போது அவர் ராஜபோதைக்காரன் எனக் கூறுவார். அந்த இடத்தில் நன்றாக கவனிச்சீங்கனா இந்த ட்யூன் தான் கேட்கும்.

Next Story