Cinema History
ஆண் ஷகீலா என அழைக்கப்பட்ட டாப் கோலிவுட் ஸ்டார்… அய்யோ இது தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முன்னணி நடிகர் உருவாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், கோலிவுட் வட்டாரத்தில் டாப் ஸ்டாராக இருக்கும் தனுஷ் முதலில் பத்திரிக்கைகளில் மோசமாக விமர்சிக்கப்பட்ட தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன். இயக்குனர் செல்வராகவனின் தம்பி. பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற பல அடையாளங்களை கொண்டவர் தனுஷ். அறிமுகத்திற்கு இதலாம் தேவைப்பட்டாலும் தொடர தொடர தனக்கான அடையாளத்தை உருவாக்கி கொண்டார்.
இதை படிங்க: டைரக்ஷனுக்கு குட்பை சொன்ன செல்வராகவன்…! தம்பி சொல்லிட்டாராம்..மீற மாட்டாராம்…
முதலில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். தொடர்ந்து படங்கள் அவருக்கு கிடைத்தது. அதில் காதல் கொண்டேன் படம் இவருக்கு பெரிய இடத்தை பிடித்துக் கொடுத்தது. மாஸ் அவதாரம் எடுத்து சில படங்களில் நடிக்க தொடங்கியதும் தனுஷிற்கு பெரிய அளவிலான வரவேற்பு உருவாகியது.
ஆடுகளம் படத்தில் தனுஷின் நடிப்பு தேசிய விருது கிடைத்தது. அப்போது தான் யார் இது என்ற ரீதியில் பலரும் அவரை கவனிக்க துவங்கினர். தொடர்ந்து பல படங்கள் பல விருதுகள் அவருக்கு கிடைத்தது. தமிழ் சினிமா துவங்கிய அவர் பயணம் ஹாலிவுட் வரை சென்றது. சமீபத்தில் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் க்ரேன் மேன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், துவக்க காலத்தில் தனுஷினை ஆண் ஷகிலா என்றே பல பத்திரிக்கைகள் விமர்சனம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கு காரணமாக முதலில் தனுஷ் வெளிவந்த சில படங்கள் பி மற்றும் சி சென்டர் படங்களாக அமைந்தது. படத்தில் சில நெருக்கக் காட்சிகள் கூட இருந்தது. இதனால் அவரின் படங்களை பெரும்பாலான குடும்ப ரசிகர்கள் தியேட்டர்களில் பார்க்காமல் இருந்தனர். இதை தனது நடிப்பால் மாற்றி இன்று அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறி இருக்கிறார்.