இரவு பார்ட்டியில் நடிகையுடன் லூட்டி அடிக்கும் ஒல்லி பிரபலம்…. இது எங்க போய் முடியபோகுதோ?

Published on: May 25, 2022
kollywood gossip
---Advertisement---

கோலிவுட்டில் ஒல்லி நடிகரின் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அந்த ஒல்லி இசையமைப்பாளர். ஆள் பார்க்க தான் ஒல்லி ஆனால் மியூசிக்கில் அவர் தான் கில்லி எனும் அளவிற்கு பட்டையை கிளப்பி வருகிறார்.

தற்போது அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களிலும் இவரை தான் தேடி தேடி வந்து ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஒல்லி இசையமைப்பாளருக்கு தமிழ் சினிமாவில் மவுசு அதிகரித்து காணப்படுகிறது.

என்னதான் ஒருபுறம் இவருக்கு மவுசு கூடினாலும் மற்றொரு புறம் இவர் பாடல்களை காப்பி அடிப்பதாக சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஆனால் இதைபற்றியெல்லாம் கவலைப்படாத நம்ம இசையமைப்பாளர் ஜாலியாக பார்ட்டிகளுக்கு சென்று லூட்டி அடித்து வருகிறாராம்.

ஆமாங்க அதன்படி ஒல்லி இசையமைப்பாளர் சமீபத்தில் அந்த தேசிய விருது நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியபோதே இருவர் குறித்து கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என கூறி மலுப்பி விட்டார்கள்.

ஆனால் இவர்கள் இருவரும் அடிக்கடி இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு லூட்டி அடித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. கத்தரிக்காய் முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தான ஆகனும் என பலரும் இவர்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment